‘லிப்ட்’ அமைப்புக்கு அவசியமான விதிமுறைகள்


‘லிப்ட்’ அமைப்புக்கு அவசியமான விதிமுறைகள்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:29 PM IST (Updated: 17 Nov 2018 3:29 PM IST)
t-max-icont-min-icon

லிப்ட் அமைப்புகளில் ‘ஆட்டோமேட்டிக் ரெஸ்கியூ டிவைஸ்’ அமைப்பு பொருத்தியிருப்பது அவசியமானதாகும்.

லிப்ட் இயங்கும்போது மின் தடை ஏற்படும் நிலையில் அதில் உள்ள பேட்டரி தாமாக இயங்கி அடுத்த தளத்தில் லிப்ட் நின்று விடுவதன் மூலம் உள்ளே இருப்பவர் வெளியில் வர முடியும்.

லூப்ரிகன்ட் ஆயில்

லிப்ட் ஏறி இறங்கும் பாதை மற்றும் அதன் ‘வெயிட்’ ஏறி இறங்கும் பாதை ஆகியவற்றில் வாரத்திற்கு ஒரு முறை ‘லூப்ரிகண்ட்’ ஆயில் தடவப்படுவதன் மூலம் சத்தம் இல்லாமல் இயங்கும்.

மின் இணைப்புகள்

லிப்டில் உள்ள பட்டன்களை குழந்தைகள் அழுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. கேபிள்கள், ஒயர்கள் உள்ளிட்ட இதர மின் இணைப்புகளை அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியம்.

புகை உணரும் கருவி

‘ஹீட்’ மற்றும் ‘ஸ்மோக் டிடெக்டர்’ போன்ற பாதுகாப்பு கருவிகள் லிப்டில் பொருத்தப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்பாராத சமயங்களில் மின் கசிவால் உண்டாகும் நெருப்பின் பாதிப்புகளை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இயக்கத்தில் கவனம்

சில நேரங்களில் லிப்ட் கதவுகளில் கை அல்லது எடுத்துச்செல்லும் பொருட்கள் சிக்கி விடலாம். அவ்வாறு நடக்காமல் லிப்ட் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவதுஅவசியம்.

பராமரிப்பு பணிகள்

அடுக்குமாடிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை இடப்பற்றாக்குறை காரணமாக உயரவாக்கில் அமைக்கப்படுவதால் லிப்ட் பயன்பாடு அவசியமானதாகி விட்டது. அதனால், அடுக்குமாடி உரிமையாளர்கள் அல்லது லிப்ட் பராமரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படியான ஏற்பாடுகளை செய்வது நல்லது.

அனுமதி அவசியம்

லிப்ட் பயன்படுத்துபவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு மின்தூக்கி சட்டம் 1997-ன் படி விதிமுறைகளை இயற்றி உள்ளது. அதன்படி லிப்ட் தயாரிப்பாளர்கள் அதற்கான உரிமத்தை அரசு மின் ஆய்வுத்துறை தலைமை மின் ஆய்வாளரிடமிருந்து பெறுவது அவசியம். அதன் அடிப்படையில் கட்டிட உரிமையாளர்கள் லிப்டை நிர்மாணித்து அதற்கு தக்க அனுமதி பெறவேண்டும்.

Next Story