உங்கள் முகவரி

வளர்ச்சி பாதையில் தாம்பரம்-சுற்றுப்புற பகுதிகள் + "||" + Tambaram , Ambient areas on growth track

வளர்ச்சி பாதையில் தாம்பரம்-சுற்றுப்புற பகுதிகள்

வளர்ச்சி பாதையில் தாம்பரம்-சுற்றுப்புற பகுதிகள்
தென் சென்னையின் முக்கிய நகரமான தாம்பரம் தி.நகர் போலவே வியாபார நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்களின் கடைகள், வணிக வளாகங்கள் என்று மாறிவருகிறது.
இன்னும் 5 ஆண்டுகளில் தாம்பரம் சிறப்பான வளர்ச்சியை எட்ட உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை இப்போது மிக முக்கியமான சாலையாக மாறிவிட்டது. தென் சென்னையில் ஓர் முக்கியமான இடத்தை தாம்பரம் பிடித்துவிட்டது. தாம்பரத்தை ஒட்டியுள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளும் அபார வளர்ச்சியை எட்டி வருகிறது. தென் மாவட்டத்தில் இருந்து வரும் மக்கள் விரும்பும் இடமாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அமைந்துள்ளன. தாம்பரம் அருகில் உள்ள பெருங்களத்தூர் பகுதியும் வளர்ச்சியை எட்டி வருகிறது. அதனால் தாம்பரத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர்.

தாம்பரம் பகுதி மக்கள் வாழ்வதற்கேற்ற அமைதியான, ரம்மியமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான பகுதியாக தாம்பரம் உள்ளது.

தாம்பரம் எல்லாவிதமான போக்குவரத்து வசதிகளையும் கொண்ட பகுதி. எல்லா சாலைகளையும் இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. வண்டலூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளை இணைக்கின்றது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் மிக அருகிலேயே உள்ளன. எனவே உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என அனைத்து பகுதிகளையும் இணைக்கும் ஓர் பகுதியாக தாம்பரம் உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் ரயில் சேவைகள் மேலும் விரிவடையும்.

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் செட்டில் ஆவதற்கு ஏற்ற பகுதியாக தாம்பரம் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தென் சென்னையையே விரும்ப பள்ளி, கல்லூரிகள் ஏராளமாக அமைந்த பகுதியாக தாம்பரம் உள்ளது.

சென்னையின் நுழைவாயில்

சென்னை பெருநகரத்தின் தெற்கு பகுதியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாம்பரம், சென்னை பெருநகரத்தின் அழகான நுழை வாயில் என்று அழைக்கப் படுகிறது. தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை மிக முக்கியமான சாலை என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு சென்னை கடற்கரையை இணைக்கும் சென்னை புறநகர் ரயில் நெட்வொர்க், சென்னையின் அனைத்து பகுதிகள் மட்டுமல்லாது மாமல்லபுரம், காஞ்சிபுரம், திண்டிவனம் போன்ற பல இடங்களை இணைக்க வசதியாக மாநகர போக்குவரத்து கழகம், வெளியூர் மற்றும் வெளிநாட்டினை இணைக்கும் சென்னை விமான நிலையம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் என பல்வேறு போக்குவரத்து வசதிகளை உள்ளடக்கிய பகுதியாக விளங்குகிறது.

தாம்பரம் - மண்ணிவாக்கம்

தாம்பரத்தை அடுத்துள்ள வண்டலூர், மண்ணிவாக்கம் போன்ற பல பகுதிகளும் இன்று வளர்ச்சியடைந்து வருகின் றன. மண்ணிவாக்கத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் தொடர்பு சாலை வசதி உள்ளது. மேலும் 2 கிலோ மீட்டர் தொலைவில் வண் டலூர் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. விரைவில் 3 கிலோ மீட்டர் தொலை வில் புறநகர் போக்குவரத்து முனையத்தின் (C.M.B.T) 2-வது நிலை அமைய உள்ளது. பத்து நிமிட பயண தொலைவில் ஒரகடம் சிப்காட் உள்ளது. மண்ணிவாக்கம் 400 அடி புறநகர் இணைப்புச் சாலைக்கு (O.R.R.) அருகில் அமைந்துள்ளது. ஸ்ரீநிகேதன், ஆல்வின் இன்டர்நேஷனல் ஸ்கூல், வேலம்மாள், போன்ற பிரபலமான தனியார் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன. முக்கியமாக மண்ணி வாக்கம் மழை வெள்ளத் தின் போது பாதிக்கப் படாத பகுதி யாக இருந்தது. இத்தகைய வசதிகளைக் கொண்டிருந்த போதும், இப்பகுதியின் வீட்டு விலை குறைவாகவே இருப்பது தனிச்சிறப்பு.

தாம்பரம் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென்னக ரெயில்வே, சென்னையின் சென்டிரல், எழும்பூருக்கு அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரெயில் முனையமாக அறிவித்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் இன்று ஜி.எஸ்.டி. சாலை மார்க்கமாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு வரை அதிகமான குடியிருப்புகளுடன் பெரு வளர்ச்சி அடைந்துள்ளது.

கல்வி நிறுவனங்கள்

தாம்பரம் அருகே பாரத் பல்கலைக்கழகம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ராமானுஜம் பொறியியல் கல்லூரி, கிரஸ்ண்ட் பொறியியல் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தாம்பரம் கிழக்கு பகுதி சென்னையின் முக்கிய சாலை மார்க்கமான வேளச்சேரி, ஓ.எம். ஆர். பகுதிகளை இணைக்கும் வகையில் இருப்பதினால், தாம்பரம் மேற்கு பகுதியை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்
ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.
2. படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்
சமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.
3. ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்
பிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.