உள் கட்டமைப்பு வசதி – புள்ளி விவர பட்டியலில் தமிழகம் முன்னணி


உள் கட்டமைப்பு வசதி – புள்ளி விவர  பட்டியலில் தமிழகம் முன்னணி
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 10:48 AM GMT)

ஐக்கிய நாடுகள் சபை ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ என்ற உலக அளவில் எட்ட வேண்டிய வளர்ச்சிக்கான குறிக்கோள்களை முன்மொழிவு செய்துள்ளது.

க்கிய நாடுகள் சபை ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ (Sustainable Development Goals -SDG) என்ற உலக அளவில் எட்ட வேண்டிய வளர்ச்சிக்கான குறிக்கோள்களை முன்மொழிவு செய்துள்ளது. அவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான உலகளாவிய வளர்ச்சிக்கான நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. அதாவது 2016 முதல் 2030–ம் ஆண்டு வரையிலான எதிர்வரும் பதினைந்து ஆண்டு காலகட்டத்தில் எட்டப்பட வேண்டிய 169 இலக்குகள் மற்றும் 17 வகையான பன்னாட்டு வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களை நிர்ணயம் செய்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுவாகும்.

நிதி ஆயோக் – ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் திட்டக்குழுவான ‘நிதி ஆயோக்’  (NITI-  National Institution for Transforming India
) அமைப்பு ஆகியவை சமீபத்தில் தெரிவித்துள்ள புள்ளி விவர குறிப்பில் (SDG India Index) கீழ்க்கண்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தமிழகம் முன்னணி

வளர்ச்சிக்கான குறிக்கோள் இலக்குகளை எட்டியதில் தமிழகம் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. அதாவது 2030–ம் ஆண்டில் 100 புள்ளிகள் இலக்கு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உலக நாடுகள் அளவில் இந்தியா 58 புள்ளிகளுடன் முக்கிய இடத்தை பெற்றுள்ளது   தமிழகம் 66 புள்ளிகளை எட்டியிருக்கிறது. இமாசல பிரதேசம் மற்றும் கேரளம் ஆகியவை 69 புள்ளிகள் பெற்றுள்ளன.

முக்கியமான குறிக்கோள்கள்

செப்டம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் ‘உலகத்தை மறு சீரமைத்தல்’ (Transforming Our World) என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான வளர்ச்சி செயல் திட்டங்கள் வரையறை செய்யப்பட்டன. அவற்றில் அடங்கியுள்ள 17 முக்கியமான குறிக்கோள்களில் நகர்ப்புற உள் கட்டமைப்பு வசதி மற்றும் அனைவருக்கும் வீடு என்ற இலக்குகளும் மையப்படுத்தப்பட்டுள்ளன.

உள் கட்டமைப்பு வசதிகள்

நவீன வசதிகள் மற்றும் தாங்கும் திறன் கொண்ட உள் கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூக அமைப்புகள், ஊர்ப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளை பாதுகாப்பு மற்றும் தாங்கும் திறன் கொண்ட வகையில் அமைத்தல், நிலங்களின் நிலைத்த பயன்பாடு மற்றும் சூழலியல் பாதுகாப்பு, நில சீர்கேடுகளை மீட்டமைத்தல், நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்பு செயல் முறைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகம் அளவிலான பல்வேறு செயல் திட்டங்கள் வளர்ச்சிக்கான இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Next Story