வெளிநாட்டு ‘மார்பிள்’ பதிகற்களில் கவனம் தேவை


வெளிநாட்டு  ‘மார்பிள்’  பதிகற்களில்  கவனம்  தேவை
x
தினத்தந்தி 18 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-18T15:59:21+05:30)

நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட வீடுகளின் ஐந்தாவது சுவராக சொல்லப்படுவது தரைத்தளம் ஆகும். அதன் வடிவமைப்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம்.

நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட வீடுகளின் ஐந்தாவது சுவராக சொல்லப்படுவது தரைத்தளம் ஆகும். அதன் வடிவமைப்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ‘வெளிநாட்டு மார்பிள்ஸ்’ வகைகளும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில் குறைவான தரம் கொண்டவையும் சந்தையில் கிடைப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, துளைகள் உள்ள மார்பிள் ரகங்களில் ஒரு வகை பசையை பயன்படுத்தி துளைகளை அடைத்து ‘செகண்டு குவாலிட்டி’ என்று சந்தையில் விற்கப்படுவதாக பலரும் தெரிவித்திருக்கிறார்கள். 

அவற்றை பயன்படுத்தும்போது நாளடைவில் துளைகள் அடைக்கப்பட்ட பசையின் வலு குறைவதன் காரணமாக மார்பிள் உடைந்து, தரைத்தளம் பாதிப்படையக்கூடும். அதனால் முன்னணி நிறுவனங்கள் மூலம் தரைத்தள பதிகற்கள் வகைகளை வாங்குவதே பாதுகாப்பானது.

Next Story