வீடுகளுக்கு அவசியமான மின் பாதுகாப்பு நடவடிக்கைகள்


வீடுகளுக்கு அவசியமான மின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 6 April 2019 1:41 PM IST (Updated: 6 April 2019 1:41 PM IST)
t-max-icont-min-icon

மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.

1. குடியிருப்புகளில் செய்யப்படும் மின் வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்வதே நல்லது.

2. பேஸ் கம்பியில் சுவிட்ச் கண்ட்ரோல் வைக்க வேண்டும். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை மற்றும் நட்சத்திர குறியிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

3. மின் பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் அதற்குரிய சுவிட்சை ‘ஆப்’ செய்யவேண்டும்.

4. பிரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றிற்கு ‘எர்த்’ இணைப்புடன் கூடிய மூன்று பின் கொண்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை அமைக்கக் கூடாது.

6. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதான வயர்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை கால தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

7. பிளக் பாயிண்ட்டுகளில் குளவிக்கூடு கட்டாமல் இருக்க துளை அடைப்பான் கொண்டவற்றை பொருத்த வேண்டும்.

8. மின் மோட்டர், அயர்ன் பாக்ஸ், வாளியில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை மின் இணைப்பை துண்டித்த பின்னரே கையால் தொட வேண்டும்.

9. சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளை ‘சுவிட்ச்’ போடச்சொல்லி விளையாட்டு காட்டுவது கூடாது.

10. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் வயரிங் அமைப்புகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

11. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.

12. மின் இணைப்பிற்கு ‘எக்ஸ்டென்ஷன்’ கார்டுகள் உபயோகிக்கும்போது, அவற்றில் பழுதுகள் இருக்கக் கூடாது.

13. வீடுகளில் ஈ.எல்.சி.பி. (E.L.C.B.) அமைப்பை மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

14. வீடுகளில் கச்சிதமாக ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தொடாத வகையில் பராமரிப்பது நல்லது.

15. இடி, மின்னல் காலங்களில் டி.வி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

16. புதிய வீடு கட்டுபவர்கள், சுவருக்குத் தண்ணீர் விடும்போது, பக்கத்தில் உள்ள மின் கம்பிகளில் படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.


Next Story