வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் ‘லான் கார்ப்பெட்’
தேவையான அளவுகளில் லான் கார்ப்பெட் வாங்கி வந்து வீட்டை அலங்கரிக்கலாம்.
பசுமையான புல்வெளி போன்ற கார்ப்பெட்டுகளை போடும் முன்னர் வராண்டா, பால்கனி, சிட்-அவுட் போன்ற இடங்களை சரியாக அளவெடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வைத்து கடைகளில் தேவையான அளவுகளில் லான் கார்ப்பெட் வாங்கி வந்து வீட்டை அலங்கரிக்கலாம். வில்லா டைப் தனி வீடுகளில் கேட் முதல் உள் நுழைவாயில் வரை அவற்றை விரித்து பசுமையான தோற்றத்தை உண்டாக்கலாம். செடிகளுடன் சேர்த்து அமைக்கும்போது கண்கவரும் தோற்றத்தில் அழகாக இருக்கும்.
மேலும், உபரியாக லான் கார்ப்பெட்டை வாங்கி வைத்துக்கொண்டு விசேஷ தினங்களில் புல் தரை போன்று விரித்து வீடுகளுக்குள் இயற்கை சூழலை உண்டாக்கலாம். தோட்டம், பால்கனி, வராண்டா, சிட் அவுட் போன்ற இடங்களிலும், மேல்மாடிகளில் தோட்டம் அமைக்க இயலாத நிலையிலும் ‘லான் கார்ப்பெட்’ போட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளை அழகாக மாற்ற இயலும்.
Related Tags :
Next Story