செங்கலுக்கு மாற்றாக பயன்படும் ‘சாலிட் பிளாக்’ கற்கள்


செங்கலுக்கு மாற்றாக பயன்படும் ‘சாலிட் பிளாக்’ கற்கள்
x
தினத்தந்தி 20 April 2019 8:26 PM IST (Updated: 20 April 2019 8:26 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர் பகுதி, புறநகர் பகுதி அல்லது ஊர்ப்புறம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் என்பது அவசியமான ஒன்றாகும்.

வழக்கமாக செங்கல் கட்டமைப்பாக சுற்றுச்சுவர்  அமைப்பதில் ஆகும் செலவு மற்றும் காலம் ஆகியவற்றை சிக்கனமாக பயன்ப டுத்த இன்றைய காலகட்டத்தில் பலவித வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் செங்கலுக்குப் பதிலாக கான்கிரீட் சாலிட் பிளாக் கற்களை பயன்படுத்தலாம். இவ்வகை பிளாக்கை பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமை க்கும்போது ஒரே நேரத்தில் 15 கற்கள் கொண்ட உயர வாக்கில் சுவரை அமை க்கலாம். ஆனால், செங்கல் சுவரை ஒரே நேரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அடுக்கி சுவரை கட்டமைத்தால் அது வலிமையாக இருக்காது.

குறைவான பட்ஜெட்

சாலிட் பிளாக் கற்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் குறைவான பணியாளர்களை பயன்படுத்தி, விரைவில் பணிகளை முடிப்பது சாத்தியம். அதனால், குறைவான பட்ஜெட்டில் வேலைகளை முடிக்கலாம். கிட்டத்தட்ட 300 சதுர அடி வீட்டுக்கு 1000 சாலிட் பிளாக் கற்கள் வரை தேவைப்படலாம். பிளாக்கின் அளவுகளை பொறுத்து எண்ணிக்கையில் குறைவாகவே கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும். அதனால், பணியிடத்திற்கு எடுத்து வருவதற்கான போக்குவரத்து பணிகள் விரைவில் முடியும். சிமெண்டு பயன்பாடும் குறைவாக இருக்கும் என்பதால், அதற்கான போக்குவரத்துச் செலவும் குறைவது கவனி க்கத்தக்கது.

சிமெண்டு பயன்பாடு குறைவு

சுவர் மேற்பூச்சு பணிகளில் இவ்வகை பிளாக் பயன்படுத்தும்போது, சிமெண்டு மேற்பூச்சை கொஞ்சம் குறைவாகவே பயன்படுத்தலாம். அதாவது, ஒரு கட்டுமான அமைப்பின் செங்கல் சுவருக்குக்கான மேற்பூச்சு பணிக்கு சுமார் 150 மூட்டை வரை சிமெண்டு பயன்படுத்தப்படும் நிலையில், சாலிட் பிளாக் மூலம் செய்யப்படும் மேற்பூச்சு பணிகளுக்கு கிட்டத்தட்ட 100 மூட்டைதான் பயன்படுத்தப்படும் என்று கட்டுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சாலிட் பிளாக் முலம் அமைக்கப்பட்ட சுவர்களை அகற்றும் நிலையில் அந்த கற்களை மீண்டும் பயன்படுத்த இயலும்.

முறையான திட்டம் அவசியம்

இன்றைய சூழலில், வெறும் கான்கிரீட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாக்குகளில், வெவ்வேறு வடிவமைப்புகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதில் முறையான திட்டமிடல் இருந்தால்தான் கட்டுமான பணிகள் நல்ல முறையில் நடக்கும். மேலும், முழுமையாக சாலிட் பிளாக் சுவர் அமைப்பாக இருக்க வேண்டும். பாதி அளவுக்கு செங்கல், மீதி அளவுக்கு ச ாலிட் பிளாக் என்ற வழியை கடைப்பிடிப்பது கூடாது. இன்றைய நிலையில், தேவையை கருத்தில் கொண்டு செங்கல் அளவிலேயே கான்கிரீட் பிளாக்குகள் தயார் செய்யப்படுகின்றன. அதனால், கட்டுமான பணிகளில் எத்தகைய கான்கிரீட் பிளாக்குகளை பயன்படுத்துவது என்பதில் தெளிவாக செயல்பட வேண்டும்.

Next Story