அஸ்திவார உபரி மண்ணை எடுத்துச் செல்ல அனுமதி அவசியம்


அஸ்திவார உபரி மண்ணை எடுத்துச் செல்ல அனுமதி அவசியம்
x
தினத்தந்தி 27 April 2019 5:31 AM GMT (Updated: 27 April 2019 5:31 AM GMT)

மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளின்போது அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கும் உபரி மண்ணை மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே மற்ற இடங்களுக்கு அதை எடுத்துச் செல்லவேண்டும்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் அஸ்திவாரம் அமைக்கும் பொருட்டு தோண்டும் போது, கிடைக்கப்பெறும் உபரி மண்ணை சம்பந்தப்பட்ட எல்லையை விட்டு அகற்றுவதற்கு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி உரிய அனுமதி பெற வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் உபரி மண்ணை அப்புறப்படுத்துவது கனிமங்கள் மற்றும் சுரங்கம் மேம்படுத்துதல், முறைப்படுத்துதல் சட்டத்தின்படியும், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியின்படியும் குற்றம் ஆகும்.

எனவே சென்னை மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் கட்டிடப் பணிகளின்போது வெளியேற்றப்பட்ட உபரி மண்ணை தக்க அனுமதி பெற்ற பின்னரே, வாகனங்களில் ஏற்றி மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.


Next Story