கட்டுமானத் திட்ட மேம்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள்
சுற்றுச்சுழல் பதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சென்னை பெருநகர் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமான திட்டங்கள் மற்றும் அதற்கான மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
உயர் அலை வீச்சின் தாக்கத்திற்கு உட்பட்ட 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிலப்பகுதிகள், முகத்துவாரங்கள், கடற்கழி மற்றும் ஆற்றுப்பகுதிகள், உயர்மட்ட அலை மற்றும் தாழ்மட்ட அலை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகள் மற்றும் உயர்மட்ட அலை எல்லைக்கோட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதிகள் ஆகியவை கடற்கரை ஒழுங்கு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ஏற்படுத்தப்படும் கட்டுமான அமைப்புகளுக்கான மேம்பாடு, இந்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டப்படி இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட கடற்கரை பகுதி வகைப்பாடுகள் மற்றும் முறைப்படுத்தல் விதிமுறைகளுக்கேற்ப முறைமை செய்யப்படும்.
நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதிகள்
நீர் வளம் உள்ள பகுதிகள், நீர் சுரக்கும் இடங்கள் ஆகியவை நீர் சுரக்கும் திறன் கொண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குன்றம் மற்றும் புழல் ஏரிப் பகுதிகள் சென்னையின் குடிநீர் விநியோகத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த நீர் நிலை பகுதிகள் நகர்ப்புற மேம்பாட்டின் காரணமாக பாதிக்கப்படாமல் காத்திட வேண்டி அப்பகுதியை செங்குன்றம் நீர்ப்பிடிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செய்யப்படும் மேம்பாட்டு விதிமுறைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் மற்றும் அப்பகுதியில் உள்ள வடிகால் அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மேம்பாட்டு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப் படை தளத்தை சுற்றியுள்ள பகுதி
தாம்பரம் அருகில் உள்ள விமான படைத்தளத்தின் எல்லையைச் சுற்றி 100 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதிகள் மேம்பாட்டு பணிகளை செய்வதிலிருந்து தடை செய்யப்பட்ட பகுதியாக இந்திய அரசு அறிக்கையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story