உங்கள் முகவரி

கட்டிட கழிவுகளின் மறுசுழற்சிக்கு ஏற்ற உபகரணம் + "||" + Equipment for recycling of waste waste

கட்டிட கழிவுகளின் மறுசுழற்சிக்கு ஏற்ற உபகரணம்

கட்டிட கழிவுகளின் மறுசுழற்சிக்கு ஏற்ற உபகரணம்
கட்டுமான கழிவுகளை அகற்றுவது சிக்கலான மற்றும் பொருள் செலவை ஏற்படுத்தும்
கட்டிட அமைப்புகளின் வயது மற்றும் பழுது ஆகியவற்றின் காரணமாக அவற்றை இடித்து, அகற்றி விட்டு புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அந்த சூழ்நிலையில் கட்டுமான கழிவுகளை அகற்றுவது சிக்கலான மற்றும் பொருள் செலவை ஏற்படுத்தும் நடைமுறையாக அமைந்து விடுகிறது. இந்த நிலையை சமாளிக்கும் விதத்தில் பழைய கட்டிடத்தின் இடிபாடுகளை தூளாக்கி, புதியதாக அமைக்கப்படும் கட்டுமான பணிகளுக்கு உகந்த ஜல்லியாக மாற்றும் ‘கிரஷர் பக்கெட்‘ அமைப்புகள் தற்போது பல்வேறு நாடுகளில் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நமது நாட்டில் அவ்வப்போது நடக்கும் கட்டுமான கண்காட்சிகளில் அவை பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

‘கிரஷர் பக்கெட்டுகள்’

அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்திய அளவிலான கண்காட்சியில் தனியார் நிறுவனங்கள் அவர்களது ‘கிரஷர் பக்கெட்’ தயாரிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தன. 7 டன் முதல் 50 டன் ‘கெப்பாசிட்டி’ கொண்ட ‘எக்ஸ்கவேட்டர்‘ எந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘பக்கெட்டுகள்’ மூலம் கண்காட்சியில் பங்கேற்றவர்கள் முன்னிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளை ஜல்லியாக மாற்றும் செயல்முறை நடத்திக்காட்டப்பட்டது. இவ்வகை ‘கிரஷர் பக்கெட்’ சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டுமான இடிபாடுகளை, சிறிது நேரத்திற்குள்ளாகவே தூளாக நொறுக்கி மறுசுழற்சி பயன்பாட்டுக்கு ஏற்ற ஜல்லியாக மாற்றுவது கவனிக்கத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றது

கட்டிட பணிகளுக்கு முற்றிலும் புதிய பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் பழைய கட்டுமானங்களை இடித்து, மறுசுழற்சி அடிப்படையில் புதிய கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம். அஸ்திவாரம் எடுக்கும் பணிகள் மூலம் கிடைக்கும் மண்ணையும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டிடத்தை உருவாக்கும் பணிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றே, பழைய கட்டிடங்களை இடித்து பயன்படுத்துவது முக்கியம். அதன் மூலம் கிடைக்கும் கான்கிரீட் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும்.

அரசாங்க நடைமுறை

இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த மேலைநாடுகளில் மறுசுழற்சி முறைகள் பிரபலமாக இருக்கும் நிலையில் வளர்ந்து வரக்கூடிய பல ஆசிய நாடுகளில் கான்கிரீட் மறுசுழற்சி முறைகள் இன்னும் போதுமான அளவில் பரவலாகவில்லை. மேலை நாடுகளில் பழைய கட்டிடத்தை இடிப்பதன் மூலம் கிடைக்கும் கான்கிரீட் கழிவுகளை, மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப கிடங்குகளில் சம்பந்தப்பட்ட அரசாங்கமே சேமித்து வைத்துக் கொள்கிறது.

கட்டிடத்தை இடிப்பதற்கான செலவை அரசாங்கம் வசூல் செய்து கொள்ளும். அவற்றை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் அரசுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம். நமது பகுதிகளில் இந்த முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆன்லைன் பட்டா

ஆன்லைன் மூலம் பட்டாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தாலும் கிராம நிர்வாக அதிகாரி, சர்வேயர், ஆர்.ஐ, தாசில்தார் ஆகியோரை நேரிடையாக சந்தித்து, இதர ஆவணங்களையும் சமர்ப்பித்து பட்டாவை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் கால தாமதம் இல்லாமல் பட்டாவை பெற்றுக்கொள்ள இயலும்.

வில்லங்க சான்றிதழ

ஆன்லைன் மூலம் பெறக்கூடிய வில்லங்கச் சான்றிதழில் சம்பந்தப்பட்ட சொத்து பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் இடம் பெற்றிருக்கும் என்பதை உறுதியாக சொல்ல இயலாது. அதன் அடிப்படையில் வீடு அல்லது மனை சம்பந்தப்பட்ட அனைத்து பத்திரங்கள், ரசீதுகள் போன்ற சகல ஆவணங்கள் மீதும் தக்க சட்ட ஆலோசனை பெற்ற பின்னரே சொத்து வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்வது நல்லது.

மனை பரப்பளவில் வித்தியாசம்

குறிப்பிட்ட பகுதியில் உள்ள இடம் அல்லது மனை வாங்கும்போது அதற்கான பட்டாவில் உள்ள அளவுகளின்படி இடத்தின் பரப்பளவு இல்லாமல் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அதாவது, களத்தில் இடத்தை அளக்கும்போது அதன் பரப்பளவுக்கான சர்வே பிழை என்பது ஒரு ஏக்கருக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ 5 சென்ட் இருக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

மனை பரப்பளவில் வித்தியாசம்

குறிப்பிட்ட பகுதியில் உள்ள இடம் அல்லது மனை வாங்கும்போது அதற்கான பட்டாவில் உள்ள அளவுகளின்படி இடத்தின் பரப்பளவு இல்லாமல் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அதாவது, களத்தில் இடத்தை அளக்கும்போது அதன் பரப்பளவுக்கான சர்வே பிழை என்பது ஒரு ஏக்கருக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ 5 சென்ட் இருக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.