வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு


வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
x
தினத்தந்தி 8 Jun 2019 12:27 PM IST (Updated: 8 Jun 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் ரெப்போ ரேட் விகிதங்களை குறைத்து அறிவித்திருந்தது.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் ரெப்போ ரேட் விகிதங்களை குறைத்து அறிவித்திருந்தது. தற்போது, மூன்றாவது முறையாகவும் ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.50 சதவிகிதத்திலிருந்து 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.25 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரல் மாதத்தில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6 சதவிகிதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மறுபடியும் ரெப்போ ரேட் விகிதம் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவிகிதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் விகிதம் குறைத்துள்ளதால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்தர தவணைத் தொகை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது.

Next Story