உங்கள் முகவரி

வீட்டுமனை வாங்குவோர் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல் + "||" + Home buyers Important Information to Know

வீட்டுமனை வாங்குவோர் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல்

வீட்டுமனை   வாங்குவோர்   தெரிந்து  கொள்ளவேண்டிய   முக்கிய   தகவல்
அரசுக்கு உரிய பூமி தான நிலம், புறம்போக்கு நிலம் உள்ளிட்ட சில வகைகள் பற்றி பலரும் அறிந்திருப்போம்.
ரசுக்கு உரிய பூமி தான நிலம், புறம்போக்கு நிலம் உள்ளிட்ட சில வகைகள் பற்றி பலரும் அறிந்திருப்போம். அந்த வகையில் BIL நிலம் என்று சொல்லப்படும் Bought In Land  என்ற வகையும் உள்ளது. அது BIL நிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்வகை நிலமும் ஒரு வகையில் அரசுக்கு உரியதாகும். 

அதாவது, நிலம் சம்பந்தமாக அரசுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தாத நிலை அல்லது ஏதாவது ஒரு விதத்தில் அரசுக்கு தண்டம் செலுத்த வேண்டிய சூழல் ஆகிய நிலைகளில் சம்பந்தப்பட்டவர் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு, அவரது நிலங்களை அரசு ஏலம் மூலம் விற்பனை செய்து, வரவேண்டிய பணத்தை மீட்டுக்கொள்ளும். ஏலத்தில் குறிப்பிட்ட சொத்தை யாருமே வாங்காத நிலையில், அந்த இடத்தை அரசே வாங்கிக்கொள்ளும். அதன் அடிப்படையில் அந்த நிலமானது Bought In Land (BIL) என்று குறிப்பிடப்படுகிறது.

அரசால் வாங்கப்பட்ட அந்த நிலமானது  வருட காலத்துக்கு ஙிமிலி நிலம் என்று வகைப்படுத்தப்படும். அந்த 2 வருடத்திற்குள் நிலம் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் தண்டம் ஆகியவற்றை செலுத்தி விட்டு நிலத்தை மீட்டுக்கொள்ள இயலும். குறிப்பிட்ட 2 வருட காலத்திற்குள் அந்த இடம் மீட்கப்படவில்லை என்றால், அரசு அதனை புறம்போக்கு நில வகையாக மாற்றி வைத்து கொள்ளும். சம்பந்தப்பட்ட நிலத்தை ஏலம் எடுத்ததில் இருந்து புறம்போக்கு நிலமாக மாற்றும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் அந்த நிலம் ஙிமிலி நிலம் என்று குறிப்பிடப்படும். குறிப்பிட்ட மனை அல்லது நிலம் இவ்வகை நிலமா..? என்று சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ–பதிவேடு மற்றும் RSLR (ReSettlement Land Record) ஆகிய வருவாய்த்துறை ஆவணங்களை கவனிக்க வேண்டும்.

அதுபோன்ற நிலங்களில் வீட்டுமனை திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை பொதுமக்கள் வாங்கினாலும், அதற்கு அரசு அளிக்கும் நில உரிமை ஆவணமான பட்டா பெறுவது இயலாது. அதனால், வீட்டு மனை, தோட்டம் அல்லது காலி இடம் ஆகியவை BIL நிலமாக இருந்தால் வாங்காமல் தவிர்த்துவிடுவதே பாதுகாப்பானது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.