தண்ணீர் தேவைக்கேற்ப ‘வாட்டர் டேங்க்’ கட்டமைப்பு


தண்ணீர்  தேவைக்கேற்ப ‘வாட்டர்  டேங்க்’  கட்டமைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 11:31 AM GMT)

தண்ணீர் பயன்பாட்டிற்கேற்ப வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மேல்நிலை ‘வாட்டர் டேங்’ அல்லது நிலத்தடி ‘வாட்டர் சம்ப்’ ஆகியவை கட்டமைக்கப்படுகின்றன.

ண்ணீர் பயன்பாட்டிற்கேற்ப வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மேல்நிலை ‘வாட்டர் டேங்’ அல்லது நிலத்தடி ‘வாட்டர் சம்ப்’ ஆகியவை கட்டமைக்கப்படுகின்றன. அதற்கு முன்னதாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது அடுக்கு மாடியில் உள்ள மொத்த அங்கத்தினர்கள் என்ற அடிப்படையில் தண்ணீர் தொட்டியின் கொள்ளளவை கணக்கிட்டுக்கொள்வது அவசியம். அதற்கான அடிப்படை கணக்கீடுகள் பற்றிய தகவலை இங்கே காணலாம்.

பொதுவாக, 4 நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கான தண்ணீர் தேவை என்பது நாள் ஒன்றுக்கு சுமார் 540 லிட்டர் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதாவது, குடிநீர், சமையல், குளிக்க, கழிவறை உபயோகம், துணி துவைக்க, பாத்திரங்கள் மற்றும் வீட்டை சுத்தப்படுத்துவது ஆகிய பல்வேறு பயன்பாடுகளின் அடிப்படையில் தண்ணீரின் உபயோகம் உள்ளது.

ஒரு கன அடி அளவு கொண்ட தொட்டியின் தண்ணீர் கொள்ளளவு சுமார் 28 லிட்டர் ஆகும். அதன்படி 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் அன்றாட தேவையான 540 லிட்டர் என்ற நிலையில் ஒரு நாளைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 19 கன அடி தொட்டி தேவை. அதன் அடிப்படையில் 6 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி ஆழம் (144 அடி) கொண்ட தண்ணீர் தொட்டி 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு வார கால தேவைக்கான தண்ணீரை நிரப்பி வைக்க இயலும்.

Next Story