அறைகளின் வெளிச்சத்துக்கு ஏற்ற மின் விளக்கு அமைப்புகள்


அறைகளின் வெளிச்சத்துக்கு ஏற்ற மின் விளக்கு அமைப்புகள்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:56 PM IST (Updated: 29 Jun 2019 3:56 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் வெளிச்சத்திற்காக அமைக்கப்படும் மின் விளக்குகள் அமைக்கப்படும் விதத்தை பொதுவான மூன்று நிலைகளாக மின்னியல் பொறியாளர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவை, ‘டாஸ்க் லைட்டிங்’, ‘ஜெனரல் லைட்டிங்’ மற்றும் ‘அக்ஸன்ட் லைட்டிங்’ ஆகியனவாகும். நமது பகுதிகளில் ஒரு வீட்டின் கட்டுமான பணியில் சுமாராக 30 பாயிண்டுகள் அமைக்கப்பட்டு, அறைக்கு ஒன்று அல்லது இரண்டு மின் விளக்குகள் பொருத்தப்படுவது வழக்கம். மேலை நாடுகளில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக வெளிச்சத்தின் அளவு மற்றும் தேவையான இடங்களில் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மின்சார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

‘டாஸ்க் லைட்டிங்’

அறைகளுக்குள் கண்களை கூசாத வகையில் மின் விளக்குகள் அமைப்பை ஏற்படுத்தும் முறை ‘டாஸ்க் லைட்டிங்’ ஆகும். பூஜையறை, சமையல் அறை, பாத்ரூம் ஆகியவற்றில் இந்த முறை பொருத்தமாக இருக்கும். இந்த பகுதிகளில் கிடைக்கும் மின் விளக்கு வெளிச்சமானது கண்களை கூசாமலும், பார்வைக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிழல் விழாமலும் இருப்பது அவசியம். டேபிள் விளக்கு, வார்டு ரோப் விளக்கு, சமையலறை பணிகளுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும் வெளிச்சம் ஆகிய நிலைகளில் இவ்வகை அமைப்பு கவனத்தில் கொள்ளப்படுகிறது.

‘ ஜெனரல் லைட்டிங்’

ஹால் மற்றும் படுக்கையறை போன்ற பகுதிகளில் கண்களை கூச வைக்காமல் ஒளிரக்கூடிய மின் விளக்குகள் அவசியம். ‘ஜெனரல் லைட்டிங்’ என்பது சீலிங் பகுதிகளில் பொருத்தப்படும் விளக்குகள், சாண்டலியர் வகைகள் போன்றவற்றை குறிக்கும். அவை, அறைகளுக்குள் பொதுவான வெளிச்ச சூழலை உருவாக்குகின்றன. படிக்கும்போது அறை முழுவதற்கும் வெளிச்சம் அளிப்பதுபோல பெரிய விளக்குகளை பயன்படுத்துவதை காட்டிலும், சிறிய அளவுள்ள இரண்டு அல்லது மூன்று விளக்குகளைப் பயன்படுத்தலாம். அதற்கு 40 வாட் டியூப் லைட்டுகளைவிட 36 வாட் ஸ்லிம் டியூப் லைட்டுகள் பொருத்தமாக இருக்கும்.

‘அக்ஸன்ட் லைட்டிங்’

வீடுகளில் உள்ள குறிப்பிட்ட பொருட்கள் மீது வெளிச்சம் விழ வேண்டும் என்ற நிலையில், ‘அக்ஸன்ட் லைட்டிங்’ பொருத்தமாக இருக்கும். அதாவது, மாடிப் படிக்கட்டுகள் நல்ல வெளிச்சமாக தெரியவும், நடைபாதைகள் சரியாக தென்படவும், தோட்டங்களின் குறிப்பிட்ட பகுதியில் பிரத்யேகமான ஒளி அமைப்பை ஏற்படுத்தவும் இவ்வகை ‘லைட்டிங்’ உதவுகிறது. இந்த முறையில் ஒளி ஊடுருவும் கண்ணாடிகளுடன் இணைத்து தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரிக்கும் அலங்கார விளக்குகள் இவ்வகையை சேர்ந்தது.

Next Story