முத்திரைக் கட்டண சலுகை
தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள சொத்துக்களை, தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே பதிவிற்காக தாக்கல் செய்யலாம்.
இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஏற்பாடு (Settlement), விடுதலை (Release), பாகப்பிரிவினை (Partition) போன்ற ஆவணங்களுக்கு ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) மற்றும் ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம் (அதிகபட்சம் ரூ.4 ஆயிரம்) வசூலிக்கப்படும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரக்குழந்தை, சகோதரர், சகோதரி ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் முத்திரைத் தீர்வை செலுத்துவதில் இந்த சலுகையை அரசு அளிக்கிறது.
பத்திரங்கள் தயாரிக்கும் விதம்
சொத்துக்களின் உரிமை மாற்றத்திற்கான பத்திரங்களை அரசின் இணையதளம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மாதிரி ஆவண வரைவுகளை பயன்படுத்தி, எழுதிக் கொடுப்பவர்களில் ஒருவர் வரைவு செய்து கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்கேற்ப பதிவுத்துறையின் இணைய தளத்தில் அனைத்து விதமான ஆவணங்களின் மாதிரி வரைவுகள் தரப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் மூலமாகவும் பத்திரங்களை தக்க விதத்தில் தயார் செய்து கொள்ளலாம்.
பத்திரப் பதிவுக்கான தாக்கல்
தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள சொத்துக்களை, தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே பதிவிற்காக தாக்கல் செய்யலாம். குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து அமைந்துள்ள மாவட்டப் பதிவாளரிடமும் பதிவுக்காக பத்திரத்தை தாக்கல் செய்யலாம். 29–03–1997 முதல் தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் செல்லாது.
கட்டிட கள ஆய்வு
மதிப்பு ஆவணத்தின்படி சார்பதிவாளர் கணக்கிட்ட கட்டிட மதிப்பை விட பத்திரத்தில் உள்ள கட்டிட மதிப்பு கூடுதலாக இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் குறைவு பதிவுக்கட்டணம், இணக்க கட்டணத்துடன் (compounding fee) சேர்த்து வசூலிக்கப்படும். ரூ.25 லட்சம் மதிப்பிற்கும் மேலுள்ள கட்டிடங்கள், சிறப்பு வகை கட்டிடங்கள், எந்திர தளவாடங்கள் உள்ள கட்டிடங்கள் ஆகியவை பதிவுத்துறைக்கான உதவி செயற்பொறியாளரால் கள ஆய்வு செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ரூ.2 லட்சத்திற்கு கீழும், ஊராட்சி பகுதிகளில் ரூ. ஒரு லட்சத்திற்கு கீழும் உள்ள ஆவணங்களுக்கு கட்டிட கள ஆய்வு செய்யப்படுவதில்லை.
Related Tags :
Next Story