உங்கள் முகவரி

வீடுகள் கட்டமைப்பில் பொதுவான டிப்ஸ் + "||" + Common Tips on Housing Buildings

வீடுகள் கட்டமைப்பில் பொதுவான டிப்ஸ்

வீடுகள் கட்டமைப்பில் பொதுவான டிப்ஸ்
இன்றைய சூழலில் கட்டுமானப் பணிகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அவை எளிமையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல சிக்கல்களை முன்கூட்டியே தவிர்க்கவும் உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
* வெளிப்புற சாலை மட்டத்தை கணக்கிட்டு, அஸ்திவாரம் சற்று உயர்த்தி அமைக்கப்படும்போது, இரண்டுக்கும் மேற்பட்ட ‘கன்சாலிடேஷன்’ செய்த பிறகே ‘பில்லிங் மெட்டீரியல்’ இட்டு நிரப்பவேண்டும்.

* ‘பேஸ்மெண்டு’ மட்டம் சரி செய்யும்போது ‘வாட்டர் லெவல் டியூபில்’ நீர்க்குமிழிகள் இல்லாது பார்த்துக்கொள்ளவேண்டும்.

* அஸ்திவாரம், பெல்ட் கான்கிரீட், லிண்டல், மேல் தளம் அமைத்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் வாட்டர் லெவல் பார்க்க வேண்டும்.

* செங்கல் சுவர் அமைப்பில், பேஸ், லிண்டல், ரூப் ஆகிய மட்டங்களில் குத்துக்கல் வரிசை கட்டமைப்பாக இருப்பது சிறப்பானது.

* ஒரு நாளில் 5 அடிக்கு மேலாக செங்கல் சுவர்கள் அமைப்பது கூடாது.

* காலம், பீம் ஆகியவற்றுடன் இணைத்து செங்கல் சுவர் கட்டும்போது தக்க துளை ஏற்படுத்தி, கம்பி வலை மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்து இணைக்கப்பட வேண்டும்.

* ‘சீலிங்’ பூச்சு பணிகளின்போது அதை சற்றே வெட்டு இரும்பு கொண்டு சிறியதாக கொத்திவிட்ட பிறகு பணியை செய்யவேண்டும்.

* ஒரே நாளில் சுவர்களுக்கு இரண்டு கோட்டிங்குகள் பூச்சு வேலைகள் செய்வது கூடாது.

* பிளம்பிங் பாயிண்டு, எலக்ட்ரிகல் பாயிண்டு ஆகிய பணிகளை முடிந்த பிறகே சுவர் பூச்சு வேலைகளை செய்யவேண்டும்.

* ‘மெயின் டோர்’ அமைப்பில் அதன் அளவிற்கேற்ப 6 கிளாம்புகள் பொருத்துவது பாதுகாப்பானது.