உங்கள் முகவரி

களிமண் நிலத்துக்கு ஏற்ற அஸ்திவாரம் + "||" + Clay is the foundation for the land

களிமண் நிலத்துக்கு ஏற்ற அஸ்திவாரம்

களிமண் நிலத்துக்கு ஏற்ற அஸ்திவாரம்
கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் மாறுபட்ட அடித்தளச் சரிவு அல்லது இறக்கம் ஆகிய பழுதுகளால், சுவர்கள், ஜன்னலின் கீழ்மட்டம் மற்றும் மேல்மட்டம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கிடைமட்ட விரிசல்கள் ஏற்படக்கூடும்.
கட்டிடம் அமைந்துள்ள ஒருசில இடங்களில் களிமண் மிக கெட்டியாகவும், விரிவடையும் தன்மை இல்லாமலும் 2 மீட்டர் முதல் 6 மீட்டர் ஆழம் வரை அமைந்திருக்கலாம். 

அதுபோன்ற பகுதிகளில் இரண்டரை மீட்டர் முதல் மூன்று மீட்டர் ஆழம் கொண்ட அஸ்திவார குழிகள் எடுக்கப்பட வேண்டும். அதற்குள் 100 மி.மீ முதல் 600 மி.மீ உயரத்தில் ‘ஸ்டோன் கிரஷர்’ மற்றும் சரளை மண் ஆகிய இரண்டையும் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் கலந்து, அந்த கலவையை 3 அல்லது 5 அடுக்குகள் போட்டு, நன்றாக கெட்டிப்படுத்த வேண்டும்.

மண் சரியாமல் உறுதியாக ஆன பின்னர், அதன் மீது தனிப்பட்ட பரவல் முறையிலான அடித்தளம் (Isolated Footings) அமைத்தால் கிடைமட்ட விரிசல்கள் உருவாகாது என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.