மின்னழுத்த வேறுபாடு ஏற்படுத்தும் பாதிப்பு


மின்னழுத்த வேறுபாடு ஏற்படுத்தும் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 3:11 PM IST (Updated: 4 Jan 2020 3:11 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார உபகரணங்களை இரண்டு பொதுவான வகைகளாக குறிப்பிடப்படுகின்றன. முதலாவது, மின் சக்தியை வெப்ப ஆற்றலாக (Thermal Energy) மாற்றும் உபகரணங்கள்.

‘அயர்ன் பாக்ஸ்’, ‘எலெக்ட்ரிக் டோஸ்ட்டர்’, ‘வாட்டர் ஹீட்டர்’, ‘இன்டக்சன் ஸ்டவ்’ ஆகியவை. இரண்டாவது வகை, மின் சக்தியை இயக்க ஆற்றலாக (Mechanical Energy ) மாற்றக்கூடியவை. அதாவது, தண்ணீரை இறைக்க உதவும் மோட்டார், மின் விசிறி, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, ஏ.சி ஆகியவை.

முதலாவது நிலையில் உள்ள வீட்டு உபயோகப்பொருட்களை மின் அழுத்தம் குறைவான நிலையில் பயன்படுத்தினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. காரணம், மின் அழுத்தம் குறைவாக இருக்கும் நிலையில் அந்த உபகரணங்கள் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குகின்றன.

இரண்டாம் நிலை மின் சாதனங்கள், குறிப்பிட்ட மின் அழுத்தத்தில் செயல்படும் தன்மை கொண்டவை. அதனால் குறைந்த மின் அழுத்தம் இருக்கும்போது அவை கூடுதலான மின்சாரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதன் காரணமாக, அவற்றின் உள்புற பாகங்கள் அதிகப்படியாக வெப்பமடைந்து, பாதிக்கப்படக்கூடும். அதனால், அவற்றுக்கு ‘வோல்டேஜ் ஸ்டெபிலைசர்’ பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, மின்னழுத்தம் குறைவாக உள்ள சமயங்களில் வீடுகளில் உள்ள மின்சார உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று எலெக்ட்ரீஷியன்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story