மின் இணைப்பில் பாதுகாப்பு அளிக்கும் உபகரணம்
வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்படும்போது ஒவ்வொரு அறைக்கும் வயர்கள் ‘சர்க்கியூட்’ அமைப்பு மூலம் தனித்தனியாக பிரித்து எடுத்துச்செல்லப்படும்.
அறைகளில் அமைந்துள்ள ஒவ்வொரு சர்க்கியூட்டுக்கும் ஒரு ‘பியூஸ்’ இருக்கும். எதிர்பாராமல் ஏற்படும் மின் பழுது காரணமாக, பியூஸ் இணைப்பு துண்டிக்கப்படும்போது ஒவ்வொரு முறையும் அதை மாற்றவேண்டும். அதனால், அந்த இடங்களில் ‘மினியேச்சர் சர்க்கியூட் பிரேக்கர்’ (Miniature Circuit Breaker-MCB) என்ற அமைப்பை பயன்படுத்துவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளுக்கும் அதை பொருத்தினால், சர்க்யூட் பழுது ஏற்பட்ட அறையில் ‘டிரிப்’ ஆகி விடுவதால், பியூஸ் போவதற்கு முன்னரே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.
Related Tags :
Next Story