சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய வீட்டுமனை விற்பனை திட்டம் தொடக்கம்
‘ஆதித்யராம் சிக்னேச்சர் சிட்டி பேஸ்-2’ என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி தொடங்கியுள்ளது.
முன்னணி கட்டுமான நிறுவனமான ஆதித்யராம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ‘ஆதித்யராம் சிக்னேச்சர் சிட்டி பேஸ்-2’ என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி தொடங்கியுள்ளது. முந்தைய திட்டமான ‘ஆதித்யராம் சிக்னேச்சர் சிட்டி பேஸ்-1’ வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பேஸ்-2 திட்டம் செயல்படுத்தப்படுவதாக நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மனைப்பிரிவானது, சென்னை மக்களுக்கு சிக்கலாக இருக்கும் அதிகப்படியான வீட்டு வாடகை, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்பு மற்றும் அடிப்படை தேவைகளில் உள்ள பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் விதமாக அமைந்துள்ளது. 600 சதுர அடியிலிருந்து பல்வேறு அளவுகளில் உள்ள இந்த மனைப்பிரிவு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் முதலீட்டு அடிப்படை ஆகிய நிலைகளில் நீண்ட கால ஆதாயம் தரும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்த மனைப்பிரிவை முதலை பண்ணையிலிருந்து 5 நிமிடத்தில் சென்று விடலாம். மனைப்பிரிவை சுற்றிலும், பொழுதுபோக்கு வளாகங்கள், சுற்றுலா பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய வசதிகள் இருக்கின்றன. மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் கடற்கரை இருக்கிறது.
இந்த வீட்டுமனை விற்பனை திட்டம் அரசின் டி.டி.சி.பி மற்றும் ரெரா ஆகிய அங்கீகாரங்களை பெற்றதாகும். வீடு கட்ட தயார் நிலையில் உள்ள இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள மனைகளுக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் ஏதுமில்லை. மேலும், மனை வாங்குபவர்களுக்கு 80 சதவீதம் வங்கி கடன் பெறவும் வசதி செய்து தரப்படுகிறது.
இவ்வாறு ஆதித்யராம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
Related Tags :
Next Story