பழமையில் புதுமை! களிமண்! டைல்ஸ்கள்


பழமையில் புதுமை! களிமண்! டைல்ஸ்கள்
x

நம்முடைய முப்பாட்டன் காலத்தில் மட்டுமல்லாது இன்றளவும் கிராமங்களில் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளையும் கழிவரையையும் பார்க்கமுடியும். இதுபோன்ற களிமண் தரைகள் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்து வீட்டிற்கு குளிர்ச்சியை தரும்.

இந்த கருத்தை மனதில் கொண்டு புதுமையாக பல டிசைன்கள் வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் களிமண் டைல்களாக தயாரிக்கப்பட்டு விற்பனையில் பட்டையைக் கிளப்புகின்றன.இவை டெரகோட்டா டைல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை டைல்களை வீட்டின் உட்புறம் வெளிப்புறம் மற்றும் சிலிங் பகுதிக்கும் பயன்படுத்துகின்றனர். கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் களிமண் “பக் மில்” எனும் இயந்திரத்தில் போட்டு நன்கு அரைக்கப்படுகின்றது. இரண்டு விதமான களிமண்ணை கலந்து செய்யப்படும் பொழுது அவை உடைவது, தண்ணீரில் கரைவது இல்லை. அது மட்டுமல்லாமல் இவைகளின் நிறமும் பளிச்சென்று இருக்கின்றது.

அரைக்கப்பட்ட களிமண் நன்கு கலக்கப்பட்டு மறுபடியும் எந்திரத்தில் அரைக்கப்படுகின்றது. அதன் பின்னரே சாக்லேட் துண்டுகள் போல வெளியே வருகின்றன. இந்த துண்டுகள் மெருகேற்றப்பட்டு மறுபடியும் டிசைன் உள்ள அச்சுகளில் எந்திரங்களின் உதவியுடன் அழுத்தப்பட்டு டிசைனர் தடைகளாக வெளிவருகின்றன. இவை பின்பு எந்திரங்களின் உதவியுடன் தேவையான வடிவங்களில் அறுக்கப்படுகின்றன. பின்னர் இவை காய வைக்கப்பட்டு சூளைகளில் சுடப்பட்டு அருமையான களிமண் டைல்களாக வெளிவருகின்றன.

நன்மைகள்:

நீண்ட காலங்கள் நீடித்து உழைப்பவையாக இவ்வகை டைல்கள் உள்ளன. குறைந்த பராமரிப்பு, உறுதியானவை, வானிலை எதிர்ப்பு நிறைந்தவை, அழகான தோற்றத்துடன் மனதைக் கவரக்கூடிய சுற்றுச்சூழல் நண்பனாக விளங்குபவை, குளிர்ச்சியானவை.

வகைகள்: இந்த வகை டைல்கள் சுவர்கள் தரைகள் மொட்டை மாடி போன்ற பல்வேறு இடங்களில் அந்த இடங்களுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுவதால் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை டெரகோட்டா டைல்களில் அழகான டிசைன்கள் உடன் வரும் ஜாலிகளும் நம்மை திக்குமுக்காட வைக்கின்றன. கருப்பு வெள்ளை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு கிரே மற்றும் பழுப்பு நிறங்களிலும் அசத்தலாக வந்து இருப்பவை புதுமாதிரியான டைல்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

Next Story