வீடுகளில் பயன்படுத்தப்படும் சூரிய ஆற்றல் உபகரணங்கள்
ஒரு வீட்டின் உட்புறம் உள்ள மின்சாரத்தால் இயக்கப்படும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும், சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரம் இல்லாமல் இயக்க முடியுமா? என்ற கேள்விக்கு இயக்க முடியும் என்று உறுதியாகச் சொல்லலாம்..
ஆம், சூரிய சக்தியை உறிஞ்சி, ஒளி மின்னழுத்த( பி வி) விளைவு மூலம் மின்சார சக்தியாக மாற்றும் வேலையை சோலார் பவர் பேனல்கள் செய்கின்றன..பெரும்பாலான வீடுகளில் கூரை அல்லது கொல்லைப்புறத்தில் சோலார் பேனல்களை நிறுவி அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு வீட்டில் உள்ள பொருட்களை இயக்குவதை பார்த்திருக்கிறோம்..
ஒவ்வொரு சாதனமும் இயங்குவதற்கு வெவ்வேறு அளவு ஆற்றல் தேவைப்படும். ஆனால்,உங்களிடம் சரியான உபகரணங்கள் மற்றும் போதுமான அளவு பேனல்கள் இருந்தால், சூரிய ஒளியைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எதையும் இயக்கலாம்.சோலார் பேனலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஆற்றலை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழி, உங்கள் வீட்டில் ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை இயக்குவதாகவும். சூரிய ஆற்றலால் இயக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்னென்ன என்பதையும்,சோலார் பேனல்களை நிறுவுவதால் ஏற்படும் நன்மைகளையும் இப்பொழுது பார்க்கலாம்.
சூரிய சக்தியில் இயங்கும் பொதுவான உபகரணங்கள்
*ஹெச்விஏசி அமைப்புகள்.
*வாட்டர் ஹீட்டர்.
* விளக்குகள்.
*வாஷிங் மெஷின் மற்றும் டிரையர்.
*ஃபிரிட்ஜ்..
*அவன்.
*தொலைக்காட்சிப் பெட்டி/ இன்டர்நெட்.
* டிஷ் வாஷர்.
* கம்ப்யூட்டர்.
*பேட்டரி சார்ஜர்.
ஹெச்விஏசி அமைப்புகள்
*ஜியோ தெர்மல் ஹீட் பம்ப்-இந்த புவி வெப்ப ஆற்றலை பயன்படுத்துவதால் மிகக்குறைந்த செலவு மற்றும் புதுப்பிக்கத்தக்க வழியில் உங்கள் வீட்டை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிரூட்டவும் முடியும். *மினி- ஸ்பிலிட் ஹீட் பம்ப்-நீங்கள் இருக்கும் வீடு அல்லது வணிக இடத்தை வெப்பமாக்க அல்லது குளிர்விப்பதற்கான இரண்டாவது மிகச் சிறந்த வழியாகும்.
* ஸ்டாண்டர்ட் ஹீட் பம்ப், *சென்ட்ரல் ஏசி/ஃபர்னேஸ்.
வாட்டர் ஹீட்டர்ஸ்
அதிக மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வீட்டு உபயோகப் பொருட்களில் வாட்டர் ஹீட்டர்களும் ஒன்றாகும்.தொழில் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் புதிய ஹீட் பம்ப் வாட்டர் ஹீட்டரை உருவாக்கியுள்ளன..இந்த வாட்டர் ஹீட்டர் வீட்டிற்கு தேவையான தண்ணீர் சூடாக வெளிப்புற காற்றிலிருந்து வெப்ப ஆற்றலை பிரித்து எடுக்கிறது.இவை பாரம்பரிய வாட்டர் ஹீட்டர்களைவிட பல மடங்கு அதிக திறன் கொண்டவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் இருக்கும் ஸ்மார்ட் தொடர்பானது வாட்டர் ஹீட்டரை எங்கிருந்தும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மூன்று முதல் ஐந்து நபர்கள் கொண்ட வீட்டிற்கு போதுமான சுடுநீரை இது வழங்குகிறது..மின்சார பயன்பாட்டை அதிக அளவில் குறைத்து நம்முடைய பணத்தை சேமிக்க உதவுகிறது..எனர்ஜி ஸ்டார் சான்றுகளை பெற்றிருப்பதும் இதுபோன்ற வாட்டர் ஹீட்டர்களுக்கு கூடுதல் மதிப்பை தருகிறது.
பல்புகள்
*எல்இடி பல்புகள்-எல்இடி அல்லது ஒளி உமிழும் டையோடு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் பல்புகள் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் விளக்குகளுக்குத் தேவையான ஆற்றலின் அளவை குறைக்க எளிதான மற்றும் மிகவும் மலிவான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த பல்புகள் பாரம்பரிய பல்புகளைவிட 75 சதவிகிதம் குறைவான ஆற்றலை பயன்படுத்துவதோடு அதிக ஒளியை வெளியிடுகின்றன.. மேலும் இவை ஒளிரும் விளக்குகளை விட நீண்ட காலம் நீடித்து உழைக்கின்றன.
*ரிமோட் கண்ட்ரோல்- உங்கள் வீட்டில் உள்ள பல்புகள், ஃபேன்கள் போன்றவற்றை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவதால் சூரிய ஆற்றலால் இயங்கும் பொருள்களை உபயோகப்படுத்துவதன் மூலம் செலவிடப்படும் சூரிய சக்தியின் அளவை குறைப்பதற்கான இரண்டாவது சிறந்த வழி என்று சொல்லலாம் .ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொருட்களை இயக்குவதால் அவற்றை இயக்கும் முழு கட்டுப்பாடும் நம்மிடம் இருப்பதோடு, பல்புகள் தேவையில்லாமல் ஒளிர்வதை தடுக்க முடிகின்றது.
* சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் வெளிப்புற விளக்குகள் அதிக வெளிச்சத்தை வழங்குகின்றன. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் தெரு விளக்குகளுக்கு சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் விளக்குகளை இப்பொழுது அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாஷிங் மெஷின் மற்றும் டிரையர்
டிரையர் என்பது ஒரு சலவை இயந்திரம் உபயோகிக்கும் ஆற்றலை விட பல மடங்கு சக்தியை பயன்படுத்துகிறது. எனவே அதிக ஆற்றல் திறன் கொண்ட எந்திரங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் இரண்டின் செயல் திறனையும் மேம்படுத்தலாம்.
சோலார் ஏசி
கையடக்க சூரிய சக்தியில் இயங்கும் குளிரூட்டும் யூனிட் ஒரு சோலார் பேனல் மற்றும் இன்வெர்ட்டரைப் பயன்படுத்தி , பேனல் வழங்கும் டி சி பவரை 3- பேஸ் ஏசி சக்தியாக மாற்றுவதன் மூலம் அதிக வெப்ப நிலையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.
சோலார் ஃபிரிட்ஜ்
சோலார் ஃபிரிட்ஜில் கம்ப்ரஸர், எரிவாயு அல்லது நகரும் பாகங்கள் இல்லை..இது நான்கு பக்கங்களிலும் கண்ணாடியால் ஆன பெட்டியாகும்..இதன் உட்புறம் உலோகத்தாலான உணவு வைக்கும் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன..இதில் இருக்கும் கண்ணாடி ஒரு வெளிப்படையான குறைந்த உமிழ்வு பூச்சுகளை பயன்படுத்துகிறது..இது வெப்ப பரிமாற்றத்தை குறைப்பதனால் உணவுப்பொருட்களை நாள் முழுவதும் அறை வெப்பநிலையில் உள்ளே வைத்திருக்கின்றது ..பாரம்பரிய குளிர்சாதன பெட்டியை விட இவை சிறப்பாக செயல்படுகின்றன.
சோலார் அவன் , சோலார் பேட்டரி சார்ஜர்கள்,விவசாயத்தில் பயன் படுத்தப்படும் இரிகேஷன் பம்புகள், சோலார் அடுப்புகள், சோலார் சக்தியால் இயங்கும் கார்கள், கைப்பேசி சார்ஜர்கள் என அனைத்துமே சிறப்பான செயல்திறன் காரணமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
Related Tags :
Next Story