கூரை தாள்கள்(ரூஃபிங் ஷீட்டுகள்)


கூரை தாள்கள்(ரூஃபிங் ஷீட்டுகள்)
x
தினத்தந்தி 2 April 2022 9:36 AM GMT (Updated: 2 April 2022 9:36 AM GMT)

வீட்டின் மொட்டை மாடியில் ரூஃபிங் ஷீட்டுகளை அமைத்து வீட்டை வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் பழக்கமானது கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகியுள்ளது என்று சொல்லலாம்.. இதுபோன்ற கூரை தாள்கள்( ரூஃபிங் ஷீட்டுகள்) பல விதமான வண்ணங்களில் பலவிதமான மெட்டீரியல்களில் விற்பனைக்கு வந்துள்ளன..இவை தளம் மற்றும் சுவர்களை பாதுகாப்பதற்காக அதிக இடங்களில் பொருத்தப்படுகின்றன.

நெளி கூரை தாள்கள்(கோர்யூகேட்டட் ரூஃபிங் ஷீட்ஸ்)

நெளி கூரை தாள்களானவை அவற்றின் மேற்பரப்பில் மீண்டும் மீண்டும் மடிப்புகளை கொண்டுள்ளன. அவற்றின் தனித்துவமான வடிவம் காரணமாகக., பல ஆண்டுகள் நம்பகமான பயன்பாடு மற்றும் மேம்பட்ட வலிமையை வழங்குகின்றன..முகடுகள் மற்றும் பள்ளங்கள் கொண்ட அவற்றின் நெளி வடிவமைப்பு அவற்றை வலிமை ஆக்குகிறது..அதன் அலை அலையான கட்டுமானமானது சிறிய மேற்பரப்பு பகுதிகளில் வலிமையை அதிகரிக்க வழி வழிவகுக்கிறது.முற்றிலும் நீடித்து உழைக்கக்கூடிய இவ்வகை கூரை தாள்கள் சுற்றுச்சூழல் நட்பு கொண்டவையாக உள்ளன..இவற்றை மொட்டை மாடி, வாகன நிறுத்துமிடங்கள், தாழ்வாரங்கள் மற்றும் கொட்டகைகளை பாதுகாக்க சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்கள்.

கால்வனேற்றப்பட்ட எஃகு தாள்கள் நெளி கூரை தாள்களுக்கு அடிப்படைப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன..இந்த எஃகு தாள்களின் மேல் பாலியஸ்டர் வண்ணப் பூச்சு பூசப்பட்ட வை அல்லது பிவிசி பிளாஸ்டிசோல் பூசப்பட்ட கூரை தாள்கள் போன்ற பல்வேறு வகையான நெளி தாள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன..நீண்ட ஆயுட்காலம் மற்றும் பொருளாதார செயல்திறன் காரணமாக பெரும்பாலும் பாலியஸ்டர் வர்ணம் பூசப்பட்ட தாள்களை கட்டிடங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

பிவிசி பிளாஸ்டிசோல் பூசப்பட்ட நெளிதாள்கள் அதிக நீடித்து உழைக்கக் கூடியவை.. அவை பிரைமர் பெயிண்ட் மற்றும் பிவிசி மூலம் சுருட்டப்பட்ட எஃகுத் தாள்களைக் கொண்டிருக்கும். இந்தத் தாள்களில் எளிதில் கீறல் ஏற்படுவதும் இல்லை அதேபோல் வண்ணம் மங்குவதும் இல்லை.. இவை பொதுவாக இருபத்தியைந்து முதல் முப்பது ஆண்டுகள் வரை நீடித்து உழைப்பவையாக இருக்கின்றன..

பாலிகார்பனேட் கூரை தாள்கள்

இவற்றை அதிக பரப்பளவு உள்ள மாடிகளில் பயன்படுத்துவதை பார்க்க முடியும்..இவற்றின் காக்கும் திறன் மற்றும் அதிக வலிமையின் காரணமாக அதிக பரப்பளவு உள்ள இடங்களுக்கு இவற்றை பயன்படுத்துகிறார்கள்..முற்றிலும் வானிலை எதிர்ப்பு, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் நிறுவ எளிதாக இருப்பதால் ஏராளமான கட்டமைப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கக்கூடிய இவ்வகை தாள்களை பெரும்பாலான கட்டிடங்களுக்கு பயன்படுத்துவதை பார்க்க முடிகின்றது..இவற்றின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக இருப்பதால் மொட்டை மாடிக்கு மட்டுமல்லாமல் நீச்சல் குளம் உள்ள பகுதிகள், ஸ்கை லைட்டிங்,நடைபாதைகள் மற்றும் காட்சிப் பலகைகள் போன்ற இடங்களில் பயனுள்ள கூரை தீர்வுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

நுரை ஆதரவு பாலிகார்பனேட்(ஃபோம் பேக்டு),தெளிவான பாலிகார்பனேட் ஆகியவை பாலிகார்பனேட் தாள்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் வகைகளாகும்.

நுரை ஆதரவு பாலிகார்பனேட் கூரை தாள்கள் இலகுரக மற்றும் நீடித்த வை..அவற்றின் நீண்ட ஆயுள் மற்றும் வலிமையின் காரணமாக,கிடங்குகளை நிறுவுவதற்கு இவற்றை பயன்படுத்துகிறார்கள்..வீட்டு உரிமையாளர்கள் குறைந்த சாய்வான கொட்டகைகள், கார் போர்ட்ஸ் மற்றும் கூரைகளை உருவாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

தெளிவான பாலிகார்பனேட் தாள்கள் உள் முற்றம், சூரிய அறைகள் மற்றும் கூரை வழியாக இயற்கை ஒளி தேவைப்படும் இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.. இந்தக் கூரை பேனல்கள் பெரும்பாலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை வடி கட்டுவதற்கு பாதுகாப்பு அடுக்குகளை கொண்டுள்ளன.சிறந்த தரம் வாய்ந்த உயர்தர பாலிப்ரோப்பிலீன் ரெசின்களில் இருந்து தயாரிக்கப்படும் பாலிகார்பனேட் தாள்கள் யூவி எதிர்ப்பு மற்றும் தீ எதிர்ப்பு திறன் கொண்டவையாகும்.

உலோக கூரை தாள்கள்

உலோகத்தால் செய்யப்பட்ட கூரை தாள்கள் பொதுவாக துத்தநாகம், அலுமினியம், தாமிரம் மற்றும் தகரம் ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டதாகும் ..ஆயுள், விலை, ஸ்டைல், ஆற்றல் திறன், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அழகியல் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கு மாறுபட்ட கூரைகளாக அவற்றை உருவாக்கி பயன்படுத்துகிறார்கள்..ஏராளமான பாணிகள், கட்டமைப்புகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கும் இவை நெளி கூரைத்தாள்களைக் காட்டிலும் குறைவான வளைவுகளைக் கொண்டிருக்கும்.

இவை அதிக இன்சுலின் திறன்களை கொண்டவையாக இருப்பதால், வீட்டின் மொட்டை மாடி கூரை, கொல்லைப்புறங்கள், தோட்ட கட்டிடங்கள், கேரேஜ்கள்,வீட்டு உறைப்பூச்சு மற்றும் தொழில்துறை கூரைகள் ஆகியவற்றின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.. உலோக கூரை பேனல்கள் அதிக காற்று, பனி, ஆலங்கட்டி மழை, மழை மற்றும் தீ ஆகியவற்றை தாங்க கூடியவையாகும்.. இந்த கூரைகள் எளிதில் உடைவதில்லை, விரிசல் அடைவதில்லை, பிளவு படுவதில்லை அதேபோல் எந்தவிதமான பூச்சிகளும் இவற்றை தாக்குவதில்லை.

பிளாஸ்டிக்கூரை தாள்கள்

இந்த தாள்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் கூரை பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றின் விலை காரணமாக தோட்ட கொட்டகைகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைந்த எடை கொண்டவை, அரிப்பை எதிர்ப்பவை, நெகிழ்வான தன்மை மற்றும் நீர்புகா தன்மை கொண்டவை போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளன.

எஃப் ஆர் பி கூரை தாள்கள், ஏசி கூரை தாள்கள் ,பிவிசி கூரை தாள்கள், யு பி வி சி கூரை தாள்கள்,, கலர் கோட்டட் கூரை தாள்கள், பி யுஎஃப் கூரை தாள்கள்,, ரப்பர் கூரை தாள்கள், பயோ காம்போசிட் கூரை தாள்கள்,பிட் யூ மேன் கூரை தாள்கள் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட கூரை தாள்கள் போன்றவை வீடுகளின் மொட்டை மாடி, பால்கனி மற்றும் படிக்கட்டுகளின் கூரைகளாகவும் சுவர் மறைப்புகளாகவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

Next Story