பாதுகாப்பானவை,பராமரிப்பு எளிது-யுபிவிசி, பிவிசி கதவுகள்
வீட்டில் தண்ணீர் அதிகமாக படக்கூடிய குளியலறை , சமையலறை போன்ற இடங்களில் மரக்கதவுகள் அல்லது இரும்புக் கதவுகளை அமைக்கும் பொழுது அவை காலப்போக்கில் தண்ணீர் பட்டு வீணாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன..
இதுபோன்ற கதவுகளுக்கு மாற்றாக வந்திருப்பவை அன்பிளாஸ்டிசை ஸ்டுபாலிவினைல் குளோரைடு அல்லது யுபிவிசி, பாலிவினை ல் குளோரைடு அல்லது பிவிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கதவுகள் ஆகும்.
அதிலும், குளியலறை கதவுகளுக்கு மிகச்சரியான தேர்வு என்று பிவிசி கதவுகளைச் சொல்லலாம்.. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நவீன கதவுகள், அதிக ஆண்டுகள் நீடித்து உழைத்து நமது பராமரிப்பு வேலையை குறைக்கின்றது.
* பிவிசி கதவுகள் தோற்றத்தில் வர்ணம் பூசப்பட்ட மரக்கதவுகளை போல இருந்தாலும், மரத்தின் தண்ணீர் உறிஞ்சக்கூடிய தன்மை இல்லாமல், பராமரிப்பு தேவைப்படாத இலகுவான கதவுகளாக இருக்கின்றன.
* இன்றை ய சூழ்நிலையில் வளர்ந்து வரும் கவர்ச்சிகரமான போக்குடன் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இவ்வகை கதவுகள் வலம் வருகின்றன.பார்வைக்கு வர்ணம் பூசப்பட்ட கதவுகளை ஒத்திருக்கும் இவை உங்கள் முதலீட்டிற்கு மதிப்புள்ளதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் பொருத்தக்கூடிய அழகான கதவுகளாக இருக்கின்றன.
பிவிசி கதவுகளை எங்கெல்லாம் பொருத்தலாம்?
படுக்கை அறை கதவுகள், ஸ்டோர் ரூம் கதவுகள்,பரணிற்கு பொருத்தப்படும் கதவுகள், சமையல் மேடையின் கீழே பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்படும் மேடைகளின் கதவுகள், காபினெட் கதவுகள்,பால்கனி கதவுகள் என எங்கு வேண்டுமானாலும் இவ்வகை கதவுகளை ஒரு கீலைப் பயன்படுத்தி சட்டத்துடன் இணைத்து பொருத்துகிறார்கள். ஸ்லைடிங் பிவிசி கதவுகள் வீட்டின் வெளிப்புற முற்றம் மற்றும் புழக்கடைகளுக்கும் அமைக்க ஏற்றதாக உள்ளன.
* குறிப்பாக அதிகம் ஈரம் படக் கூடிய இடங்களில் பிவிசி கதவுகள் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன ?
குளியலறைகள் பொதுவாக எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும் பகுதியாகும். ஈரப்பதத்தை எதிர்க்கக்கூடிய தன்மை பிவிசியில் இருக்கின்றது.. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு தண்ணீர் இந்த கதவுகளின் மேல் பட்டாலும் அதன் காரணமாக கதவின் நிறம் மாறுவது அல்லது சிதைவது என்ற பேச்சுக்கே இடமில்லை . இந்த கதவுகளில் அதிக ஈரம் பட்டாலும் பாசி பிடிக்கும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று சொல்லலாம்.
மரம் மற்றும் உலோக கதவுகளுடன் ஒப்பிடும் பொழுது இவ்வகை பிவிசி கதவுகளின் விலை குறைவாகவே இருக்கின்றது.. விலை குறைவாக இருப்பதால் இவற்றின் பாதுகாப்பு குறித்து சிறிய சந்தேகம் எழலாம்.. இவ்வகை கதவுகள் பாதுகாப்பை தருவதுடன், சிறந்த செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவையாகவும் இருக்கின்றன.. குறைந்த பராமரிப்பு, வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டிருப்பதால் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தக்கூடிய சிறந்த கதவுகளாக இவை விளங்குகின்றன.
* எண்ணிலடங்காத வண்ணங்கள் மற்றும் கண்ணைக்கவரும் டிசைன்களில் இவை சந்தையில் விற்கப்படுவதை பார்க்க முடிகின்றது.. பிளெயின் வண்ணங்கள்,சட்டத்திற்கு ஒரு வண்ணமும் மீதி இடத்திற்கு மற்றொரு வண்ணமும், கதவின் கீழ்புறம் மரத்தின் வண்ணத்தில் பட்டை போட்டது போன்று இருக்க மேல்புறம் கண்ணாடியில் டிசைன் செய்யப்பட்டது போன்று இருப்பது, முழு கதவிலும் டால்ஃபின்கள் துள்ளிக் குதிப்பது போன்று இருப்பது,பெரிய பெரிய ரோஜா மலர்கள் மலர்ந்தது போன்ற டிசைன்கள், மரங்கள் செடிகள் இருப்பது போன்ற டிசைன்கள், மான்கள் துள்ளிக் குதிப்பது, மயில்கள் தோகை விரித்து ஆடுவது, அன்னப்பட்சி குளத்து நீரில் நீந்துவது, கோபம் கொண்ட யானை துரத்துவது, குதிரைகள் கூட்டமாக ஓடுவது என அனைத்தும் தத்துரூபமாக நம் கண்முன்னே இருப்பது போன்று எண்ணிலடங்கா டிசைன்களும் கண்ணைக்கவரும் வண்ணங்களும் பிவிசி கதவுகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அறைக்கு பூசும் வண்ணத்திற்கு ஏற்றார் போல் பிவிசி கதவுகளின் வண்ணங்களையும் டிசைன்களையும் தேர்வு செய்து பொருத்துகிறார்கள்.
* இந்த கதவுகளை சுத்தம் செய்வதற்கு சிறிய பெயிண்ட் பிரஷ்களைப் பயன்படுத்தலாம்.. வேக்யூம் கிளீனர் கொண்டும் இந்த கதவுகளில் படிந்திருக்கும் விடாப்பிடி தூசிகளை அகற்றலாம். மென்மையான துணி, தண்ணீர் மற்றும் சோப்பை பயன்படுத்தியும் கதவுகளை சுத்தம் செய்யலாம்.
யுபிவிசி கதவுகள் எதனால் செய்யப்படுகின்றன?
அன்பிளாஸ்டிசைஸ்டு பாலிவினைல் குளோரைடு என்பதன் சுருக்கமே யுபிவிசி ஆகும். இவை தயாரிக்கப்படும் பொழுது எந்த சேர்க்கைகளும் சேர்க்கப்படாத கடினமான ஒரு வகை பிளாஸ்டிக் ஆகும். இவை வெளிநாட்டில் மட்டுமல்லாது இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வரும் கதவுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
* பிவிசி கதவுகளை விட யுபிவிசி கதவுகள் மிகவும் பாதுகாப்பானவை . இவ்வகை கதவுகளில் கால்வனேற்றப்பட்ட ஸ்டீல் கோர் இருப்பதால், இது நீடித்த பூட்டுதல் அமைப்புடன் கதவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் திறந்து மூடுவதற்கு உதவுகின்றது. மற்ற கதவுகளுடன் ஒப்பிடும்போது இவை அதிகம் நீடித்து உழைப்பவையாக உள்ளன.
* கதவுகள் மட்டுமல்லாது ஜன்னல் ஃபிரேம்களும் யுபிவிசியில் அமைப்பது இப்பொழுது பிரபலமாகி வருகின்றது.
* இந்த கதவுகளின் ஆயுட்காலம் கதவுகளின் தரம், நிறுவல், பொருத்தப்படும் இடம் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது மட்டுமல்லாமல் உபயோகிக்கும் நபர்களைப் பொறுத்தும் மாறுபடுகின்றது.
* வெள்ளை , ஆலிவ்கிரே , லைட்கிரே , ஆன்த்ர சைட்ஸ், வொய்ட் வுட்கிரைன், பிளாக் வுட்க் ரைன், கிரே சீடார், கோல்டன் ஓக் போன்ற வண்ணங்களில் இவ்வகை கதவுகள் கிடைக்கின்றன.
* வண்ண யுபிவிசி கதவுகள் மீள்கின்ற மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்டவையாக உள்ளன.. இவை துருப்பிடிப்பதில்லை , எளிதில் மங்குவதில்லை .. மிகவும் ஆடம்பரமாக செய்யப்படும் கதவுகளுக்கு சிறந்த மாற்றாக இவ்வகை கதவுகள் உள்ளன.
Related Tags :
Next Story