பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளை நாடும் வாடிக்கையாளர்கள்


பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளை நாடும் வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 30 April 2022 10:07 PM IST (Updated: 30 April 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

இன்று வீடு வாங்க விரும்பும் பலரும் வீடுகளில் பசுமை அம்சங்கள் இருக்கிறதா என்பதை பெரிதும் விரும்பி கவனிக்கின்றனர்.

 பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளுக்கு விலை அதிகம் கொடுக்கவும் மக்கள் தயங்குவதில்லை என்பது வரவேற்க வேண்டிய ஒரு மாற்றம்.

சமீபத்தில் கிடைத்த சில புள்ளிவிவரங்களின்படி கடந்த வருடத்தை விட இந்த வருடம் பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளை வாங்குவது ம் பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளை விற்பது சுலபமாக இருப்பதும் கிட்டத்தட்ட 30% வரை கூடியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உள்ள சோலார் பேனல்கள் மின்சார சேமிப்பு அம்சங்கள் கொண்ட வீடுகளை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளை வாங்க விரும்புவதற்கு மின்சார செலவு குறைகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டின் உட்புற காற்றின் தரம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியதாக இருக்கிறது என்பதும் அதிக வசதிகளை கொடுக்க கூடியதாக இருப்பதும், நல்ல தரமான நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டுமானங்கள் என்பதும் பசுமை அம்சங்கள் கொண்ட வீடுகளுக்கு, வீடுகளை விற்கும்பொழுது நல்ல விலையை ஈட்டிக் கொடுக்கும் என்பதும் காரணமாக கருதப்படுகிறது.

Next Story