அழகு,கவர்ச்சி தரும் நவீன கண்ணாடித் தொகுதிகள் (பிளாக்குகள்)
நவீனமாக கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில் கண்ணாடி பிளாக்குகளினால் அழகான தடுப்புகள் அமைக்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகு நிறைந்ததாகக் காணப்படும் இதுபோன்ற கண்ணாடிச் சுவர்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது.
இவ்வாறு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த கண்ணாடி பிளாக்குகள் மிகவும் பிரபலமான கட்டிடப் பொருளாக உள்ளது. இது பெரும்பாலும் பகிர்வு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடியின் வெளிப்படைத் தன்மையை பொறுத்து ,நீங்கள் தனிமையை எதிர்பார்க்கும் இடங்களில் இந்த கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்தலாம்.
கட்டுமானங்களில் வியத்தகு அழகியல் விளைவுகளை உருவாக்க கண்ணாடித் தொகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடித் தொகுதி வழியாக ஒளியானது ஊடுருவும்போது அதன்வெளிப்படைத்தன்மை பயன்படுத்தப்படும் கண்ணாடித் தொகுதியின் வடிவத்தைப் பொறுத்தது மற்றும் அதற்கு ஏற்ப வெவ்வேறு விளைவுகளை உருவாக்குவதன் காரணமாக நீங்கள் கண்ணாடித் தொகுதிகளை தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்..
ஆற்றல் திறன் கொண்ட கட்டிடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இது போன்ற கண்ணாடித் தொகுதிகள் சிறிய அளவில் கைக்கு அடக்கமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆற்றல் திறன், ஒலி கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றை வழங்குகின்றன. கண்ணாடித் தொகுதிகள் வணிக மற்றும் குடியிருப்பு திட்டங்களில், சுமை தாங்காத சுவர்கள், ஜன்னல்கள் அல்லது பகிர்வுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கண்ணாடித் தொகுதி என்றால் என்ன?
கண்ணாடித் தொகுதி என்பது ஒரு ஒளி ஊடுருவக்கூடிய, வெற்றுத் தொகுதியாகும்..இது தெளிவான, கடினமான அல்லது வடிவமைக்கப்பட்ட முகங்களைக் கொண்ட ஒரு பகுதி அளவு வெற்றிடத்தில் இரண்டு பகுதிகளை இணைத்து உருவாக்கப்படுகிறது.. இதனை கண்ணாடி செங்கல் என்றும் அழைக்கிறார்கள். கண்ணாடியால் செய்யப்பட்ட கட்டுமானப் பொருளான இது அதன் நிறம், அளவு மற்றும் அமைப்பு ஆகியவற்றில் மாறுபடுகின்றது..
வீட்டில் கண்ணாடித் தொகுதிகளை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?
வீடுகளில் கண்ணாடித் தொகுதிகளை பயன்படுத்துவதற்கான முதன்மை காரணம் அது வீட்டின் உட்புறத்திற்கு வெளிச்சத்தை வழங்குகின்றது.. முகப்புகள், பகிர்வுகள், ஜன்னல்கள், படிக்கட்டு கைப்பிடிகள் மற்றும் சுமை தாங்காத வெளிப்புற மற்றும் உட்புறச் சுவர்கள் போன்றவற்றை அமைக்க கண்ணாடித் தொகுதிகளை பயன்படுத்தலாம். குளியலறைகளில் ஷவர் ஸ்டால்,சமையலறை பேக்ஸ்பிளாஷ் அல்லது அலங்காரத்துடன் வரும் முன் கதவு போன்ற வீட்டின் உட்புற அலங்காரங்களில் கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்துகிறார்கள்..
கண்ணாடித் தொகுப்பின் பங்களிப்பு
வீட்டின் முகப்பு என்பது கட்டிடத்தின் தனித்துவமான கட்டிடக்கலை அழகியலை தீர்மானிக்க உதவும் ஒரு நேர்த்தியான கூறு ஆகும். மேலும், இது கட்டிடத்தின் ஆற்றல் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. முகப்பில் கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்துவதால் வீட்டிற்குள் வெளிச்சம் அதிகமாக வருவதன் காரணமாக வீட்டின் மின் சேமிப்பில் இவை முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
கண்ணாடித் தொகுதிகளால் அறைப் பகிர்வுகளை உருவாக்கும் பொழுது அவை அறையைச் சுற்றி அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சி இருண்ட இடங்களை பிரகாசமாக்குகிறது.மேலும், இவை வெப்பத்தைத் தக்கவைப்பதன் மூலம் அறை வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன.
படுக்கை அறை, குளியலறை அல்லது தனிமை தேவைப்படும் பிற பகுதிகளில் கண்ணாடித் தொகுதிகளை ஜன்னல்களின் உருவாக்கத்தில் பயன்படுத்துகிறார்கள்
கண்ணாடித் தொகுதிகளை வீட்டின் உட்புற மாடிப் படிக்கட்டுகளின் கைபிடிகளாக பயன்படுத்தும் பொழுது அவை பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றன.. இவை வெளிச்சத்தைத் தருவதால் பகலில் செயற்கை ஒளி தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், சாதாரண கண்ணாடியை விட இவற்றைச் சுத்தம் செய்வது எளிது.
ஆற்றல் சேமிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இப்பொழுது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்படுகின்றன..எனவே கண்ணாடித் தொகுதிகளை ஒரு சுவர் போன்ற அமைப்பில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒளியை கடத்துவதோடு, வெப்பத்தை குறைக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் ஆற்றல் தேவைகள் குறைந்து உங்கள் பணமும் மிச்சப் படுத்தப்படுகின்றது..
குளியலறைகளில் கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்தும் பொழுது அவை வெளிச்சத்தை வழங்குவதோடு, தனிமையையும் வழங்குகின்றன. மேலும் இந்த கண்ணாடித் தொகுதிகளை சுத்தம் செய்வதும் எளிது.
சமையலறையில் உணவு மேடைகளின் சுவர்களை அமைப்பதற்கு கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்துவது இப்போது பிரபலமாகி வருகின்றது. விரும்பிய உயரத்திலும், அகலத்திலும் கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்தி உணவு உண்ணும் மேடைகளை அமைத்துக்கொள்ளலாம்.
மிகவும் நவீனமான ஸ்மார்ட் கிச்சன் அமைக்க விரும்புபவர்கள் கண்ணாடித் தொகுதிகளைக் கொண்டு பேக்ஸ்பிளாஷ் அமைத்துக் கொள்கிறார்கள்..இங்கு கண்ணாடித் தொகுதிகளைப் பயன்படுத்துவதன் நோக்கம் சமைக்கும் பொழுது உணவுப் பொருட்கள் தெறிப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதோடு இவற்றை துடைத்து சுத்தம் செய்வதும் எளிது.
அலுவலகங்கள், சுரங்கப்பாதை டெர்மினல்கள், பார்க்கிங் கேரேஜ்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றிலும் இந்த கண்ணாடித் தொகுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
நன்மைகள்
இயற்கை ஒளியைக் கடக்க அனுமதிக்கிறது.
தனிமையை வழங்குகிறது.
பல விதமான வகைகளில் கிடைக்கின்றது.
பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மையை வழங்குகின்றது.
வெப்பம் மற்றும் ஒலி காப்பை வழங்குகிறது.
மிகவும் எதிர்ப்புத்திறன் கொண்டது.
பசுமை கட்டிடங்களுக்கு பொருத்தமானவை.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் கொண்டவை.
Related Tags :
Next Story