கிராஸ் லேமினேட்டட் டிம்பர்


கிராஸ் லேமினேட்டட் டிம்பர்
x
தினத்தந்தி 14 May 2022 3:21 PM IST (Updated: 14 May 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலில் அதிக அளவு சிமெண்ட், மணல், கான்கிரீட் போன்றவை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது இப்பொழுது படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் திடக்கழிவுகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் கட்டுமான நிறுவனங்களும் ஒன்றாக உள்ளன.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் புதுப்பிக்கத்தக்கவை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.இந்த வரையறையை மாற்றுவதற்காக வந்திருக்கும் சில பொருட்களில் கிராஸ் லேமினேட்டட் டிம்பர்(சிஎல்டி)என்பது அதன் வலிமை, தோற்றம், பல்துறை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றிற்காக தனித்து நிற்பதோடு கட்டுமானத்துறையில் நல்ல எதிர்காலத்தை கொண்டிருக்கும் பொருளாகவும் பார்க்கப்படுகின்றது.

சிஎல்டி என்பது பலகைகள்( அல்லது லேமெல்லாஸ்),மரத்தூள், க்ளூ மற்றும் ஒட்டப்பட்ட பலகைகளால் செய்யப்படுகின்றது.. இதில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் முந்தையவற்றுக்கு செங்குத்தாக அமைந்திருக்கும். செங்குத்து கோணங்களில் மர அடுக்குகளை இணைப்பதன் மூலம், பேனலுக்கான கட்டமைப்பு விறைப்பு, தடிமனான கூறுகளுடன் இரு திசைகளிலும் பெறப்படுகின்றது ..இதன் மூலம் இந்த பேனலுக்கு பெரும் இழுவிசை மற்றும் சுருக்க வலிமை கிடைக்கின்றது.

இது மரத்தாலான ஒரு நிலையான பொருளாகவும் அதே சமயத்தில் புதுப்பிக்கத்தக்க பொருளாகவும் இருக்கின்றது. இவை பெரிய கட்டுமான தளங்களில் உள் கட்டமைப்பு மற்றும் ஆதரவுக்காகவும் ,பாலங்களை கான்கிரீட் செய்வதற்கான அமைப்புகள் மற்றும் அணைகள் கட்டும் போது நிலையற்ற நிலப்பரப்பில் டிராக்டர்களுக்கான தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இதன் சுவாரஸ்யமான தோற்றம் மற்றும் கட்டமைப்பு வலிமை காரணமாக சிறிய கட்டுமானம்களிலும் இதனை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கின்றது. 

தற்போது, சி எல் டி பாகங்களைக் கொண்டு வானளாவிய கட்டிடங்கள் கூட கட்டப்பட்டு வருகின்றன. இந்த பேனல்களைக் கொண்டு சுவர்கள், தரைத் தளங்கள், அறைகலன்கள், சீலிங் மற்றும் கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.நம்முடைய திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு தடிமன் மற்றும் நீளத்தில் சிஎல்டி கிடைக்கின்றது..நம்முடைய தேவைக்கு ஏற்ப உற்பத்தியின் போது சிஎல்டி பேனல் வடிவமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகள், திறப்புகள் போன்றவற்றில் வெட்டப்பட்டு, ட்ரில் செய்யப்பட்டு கிடைக்கின்றன.. இவற்றை கட்டுமான இடங்களுக்கு கொண்டு சென்று அப்படியே எளிதாக வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இவை ஒரு தனிப் பொருளாலான திடமான பேனலாக இருப்பதால், இதைக் கட்டமைப்பில் பயன்படுத்தும்போது அதற்கு உறைப் பூச்சு தேவையில்லை.இதன் காரணமாக இதன் இறுதியான தோற்றத்திற்கான பொருட்களின் தேவை மற்றும் இதற்கென தனியாக வேலை செய்யும் ஆட்களின் கூலி போன்றவற்றையும் குறைக்கின்றது..பொதுவாக, மேற்பரப்பு களுக்கு மரத்தின் இயற்கையான வடிவமைப்புடன் ஒரு வெளிப்படையான நீர் காப்பு பயன்பாட்டை வழங்குகிறது.

இதனைக் கொண்டு கட்டப்படும் கட்டுமானங்கள் குறைந்த நாட்களில், விரைவாகவும், குறைந்த பொருட்செலவில் கட்டப்படுவது மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இந்தியாவில் இப்பொழுது கட்டப்படும் நவீன அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனி வீடுகளில் ஒரு அறையாவது சிஎல்டி யால் கட்டப்படுவதை நாம் பார்க்க முடிகின்றது.. தரைத் தளங்கள், சுவர்கள் மற்றும் சீலிங்குகளை அமைப்பது அல்லது தரைத் தளங்களை மட்டும் அமைப்பது இப்பொழுது பெருகி வருகின்றது..

இதன் அழகான தோற்றம் மற்றும் நீடித்த உழைப்பு காரணமாக மட்டுமல்லாமல் இவற்றை சுத்தம் செய்வது எளிது என்பதாலும் இவற்றை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். லேமினேட்டட் கிராஸ் டிம்பர் புதுப்பிக்கத்தக்க பொருளாக இருப்பதாலும் கட்டுமானத் தொழிலில் இவை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

Next Story