வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்களின் பயன்கள் மற்றும் மீன் தொட்டி வைக்கும் திசை
வாஸ்து என்பது வேத கால அறிவியல். வாஸ்து முறைப்படி வீடு அமையாவிட்டால் ஏற்படும் துன்பங்களை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று வீட்டில் மீன் வளர்ப்பது. மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்து வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இனி வீட்டில் மீன் தொட்டியை எங்கு வைப்பது, அதில் என்னென்ன வாஸ்து மீன்கள் வளர்க்கலாம், அதனால் அடையும் பயன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் மீன் தொட்டியை வைப்பது சிறப்பு . வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது. மீன் தொட்டி வீடடை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. விருந்தினர்களின் மகிழ்ச்சியை கூட்டுகிறது. மீன்களுக்கு உணவிடும் போது நம் கர்மாவை கழிப்பதோடு மன அமைதியை அளிக்கிறது. மீன்கள் வீட்டில் மட்டும் அல்ல பள்ளிகள், அலுவலகங்களிலும் வளர்க்கலாம்.
வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்கள் பற்றி பாப்போம்.
டிராகன் மீன் (Dragon Fish)
டிராகன் மீன் வாஸ்து மீன்களில் முதன்மையானது மற்றும் வாஸ்து மீன் தொட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மீனாகும். வாஸ்து மீன்களிலேயே மிகவும் விரும்பப்படும் மீனாகும். இதை வீட்டில் வளர்த்தால் அதிகாரம், வளமை, மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் தருக் கூடிய ஆற்றல் உள்ளது. இது மற்ற மீன்களை விட விலை உயர்வானது.
கோல்ட் மீன் (Gold Fish)
கோல்ட் மீனும் டிராகன் மீனுக்கு இணையானது. இது விலையும் குறைவு; அதிக எண்ணிக்கையில் வளர்க்கப் படும் மீனாகும். இந்த வாஸ்து மீன் அழகு மற்றும் நல்லிணக்கத்தின் வடிவமாகும். இது வீட்டில் வளர்க்கும் போது குடும்பத்தில் நல்லிணக்கத்தை உண்டு பண்ணக்கூடியது. கோல்ட் மீன்களை பார்க்கும் போதே மனக் கவலைகள் பறந்து போகும்; மனதில் அமைதி பிறக்கும்.
பிளாக் மூர் (Blackmoor)
கட்டாயம் வாஸ்து மீன் தொட்டியில் இந்த பிளாக் மூர் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் வாஸ்து மீன்களை வளர்ப்பதே தீய சக்திகளை வெளியேற்றத் தான். பிளாக் மூர் தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திகளை வெளியிடக் கூடியது. இந்த மீன் வீட்டில் இருந்தால் நல்ல சக்திகள் வீடு முழுவதும் பரவி இருக்கும் என்பது உறுதி.
பட்டர்ப்ளை கொய் (Butterfly Koi)
பட்டர்ப்ளை கொய் கடுமையான நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது வெற்றி மற்றும் சாதனைகளின் வடிவமாகும். உங்கள் வீட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருந்தால் நிச்சயம் இந்த மீன் வீட்டில் இருக்க வேண்டும். இம்மீனை அவர்கள் பார்க்கும் போதெல்லாம் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை. குடும்பத்தில் உள்ளளவர்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் இந்த பட்டர்ப்ளை கொய் மீன்.
பிலோவேர் ஹார்ன் மீன் (Flower Horn Fish)
அழகு என்றால் அது பிலோவேர் ஹார்ன் மீன் தான்.இந்த மீன் அதிர்ஷ்டத்தையும் அன்பையும் ஒன்றாகத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு ஆரோக்கியத்தையும் தரும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சந்திப்பவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். எனவே வீடிற்கு வரும் விருந்தினர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள், இதனால் உறவுகள் மேம்படுவதோடு, கிளைத்து வளர்வதும் உறுதி.
ஒரு வாஸ்து மீன் தொட்டியில் குறைந்தது 9 வாஸ்து மீன்களாவது இருக்க வேண்டும். அதில் 8 மீன்களில் மேலே சொன்ன 5 மீன்கள் இடம் பெற வேண்டும். இவற்றில் பிளாக் மீன் (Black Fish) இடம் பெறலாம், இடம் பெறாமலும் இருக்கலாம்.
வாஸ்து மீன்கள் வளர்ப்பதால் பெரும் நன்மைகள்.
மீன் தொட்டி தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திககளை உற்பத்தி செய்கிறது. மிகவும் உற்சாகமான ஆரோக்கியமான மீன்கள் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் ஈர்க்க உதவும்.
நீங்கள் பசியோடு உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்.
மீன் தொட்டியை வேடிக்கை பார்ப்பது, நண்பர்களோடு பழகுவது போன்றதாகும்; அவை உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மிக மிக உறுதுணையாக இருக்கும்.
உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான திசையில் மீன் தொட்டி வைத்தால் அந்த பிரச்சனை விலகும்.
இறுதியாக, மீன் தொட்டி உங்கள் வீட்டை அழகாகவும் அற்புதமாகவும் ஆக்கும் என்பது உறுதி.
நாள் முழுவது உழைத்து களைப்போடு வீட்டில் நுழைந்ததும் ஓடி விளையாடும் குழந்தைகளைப் பார்ப்பது போல அங்கும் இங்கும் நீந்தும் இந்த மீன்களை பார்த்தால் உடல் மன களைப்பு பறந்து போவது உறுதி. இவ்வளவு நன்மைகளை அளிக்கும் வாஸ்து மீன்களை நம் வீட்டில் வளர்த்து நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவோம்.