வெவ்வேறு வகையான கதவு கீல்கள் (ஹின்ஜஸ்)
கதவுகள் செயல்படுவதற்கு மிகவும் முக்கியமாக செயல்படக்கூடிய ஒரு பொருள் கீல்களாகும்.உங்கள் கதவை சரியான நிலையில் வைத்திருப்பதில் கீல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தக் கீல்கள் கதவையும், கதவு பொருத்தப் படக்கூடிய சட்டத்தையும் இணைக்கின்றன.வீட்டின் கதவைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் கீல்கள் முக்கிய புள்ளியாகச் செயல்படுகின்றன.நம் வீட்டிற்கு புதியதாக கதவுகளை பொருத்துவதாக இருந்தாலும் அல்லது பழைய கதவுகளை வாங்கி பொருத்தினாலும் கதவை சரியான நிலையில் வைத்திருப்பதில் கீல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.செயல்பாடு, கதவு செய்யப் பயன்படுத்தப்படும் பொருள் ஆகியவற்றைப் பொறுத்து கதவுகளை நிலைநிறுத்த பல்வேறு வகையான கதவு கீல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கதவு கீல்கள் பின்வரும் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன:
கீல்கள் பொதுவாக இரண்டு லீவ்ஸ் மற்றும் னக்கல் கொண்டிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒற்றைப்படை எண்ணை இணைக்கும் பகுதிகளால் னக்கல் உருவாகிறது.
ஒரு முள் போன்ற பொருள் னக்கலின் மையத்தில் இயங்கி,ஒரு அச்சாக செயல்படுகிறது.
கீல்கள் பொதுவாக பித்தளை அல்லது எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன.
கீல்கள் பொதுவாக கவுண்டர்சங்க் ஹெட் திருகுகளுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன.
தொழில்நுட்ப விவரங்கள்:
1. உயர் தர எஃகு மூலம் தயாரிக்கப்பட்டது.
2. அதிலிருக்கும் முள் சாதாரணமாக உபயோகப்படுத்தும் போது உயராத நிலையில் அமர்ந்திருக்கும்.
சந்தையில் கிடைக்கக்கூடிய கீல்கள்
பால் பேரிங் ஹின்ஜஸ் - இது ஒரு வகை பட்ட் டோர் கீல்கள் ஆகும்,இவை னக்கல்ஸ்க்கு இடையில் மறைக்கப்பட்ட தாங்கு உருளைகளைக் கொண்டுள்ளது.இது உராய்வைக் குறைக்கிறது மற்றும் கதவுகளை மிகவும் சீராக நகர்த்த உதவுகிறது.நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் கனமானதாக இருக்கும் இந்த ஹெவி-டூட்டி கீல்கள் நுழைவாயில் கதவுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
பேரல் ஹின்ஜஸ் - இவை ஒருவகை சிறப்பான மரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிறிய பெட்டி போன்ற அமைப்பு அல்லது கபோர்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.மேலும், நீங்கள் கதவு கீல்களை மறைக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு இது சரியான தேர்வாகும். பொதுவாக இவ்வகை கீல்கள் பித்தளையால் செய்யப்படுகின்றன.
பட்ட் ஹின்ஜஸ் - கதவுகள் மற்றும் அலமாரிகளில் காணப்படும் மிகவும் பொதுவான கதவு கீல்கள் பட்ட் கீல்கள் ஆகும்.இதில் இரண்டு செவ்வக லீவ்ஸ்களின் நடுவில் னக்கல் மற்றும் ஒரு முள் இணைக்கப்பட்டுள்ளது.அவை நான்கு வகைகளில் கிடைக்கின்றன: ப்ளைன்பேரிங்,பால்பேரிங்,ஸ்பிரிங்-லோடட் மற்றும் ரைசிங்.
கன்சீல்டு ஹின்ஜஸ் - இவை கண்ணுக்கு தெரியாத கீல்கள், மறைக்கப்பட்ட கீல்கள் மற்றும் ஐரோப்பிய கீல்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.அவற்றின் மென்மையான, தடையற்ற தோற்றம் ஒருவிதமான அழகியல் மகிழ்வை கொடுக்கின்றது. மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கின்றது. அலமாரிகள், கேபினட்கள் மற்றும் கதவுகளை தேர்ந்தெடுக்கும்போது, அதிக நவீனமாகத் தோன்றும் ஐரோப்பிய பாணி கீல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.நிறுவப்பட்ட கதவுகளுக்கும் இதுபோன்ற ஐரோப்பிய பாணி கதவு கீல்களைப் பொருத்தி கதவுகளை சீரமைக்கலாம்.
ஹெவி டியூட்டி ஹின்ஜஸ் - இந்த கீல்கள் கனமான கதவுகள் (நுழைவு கதவுகள், வாயில் கதவுகள் அல்லது மரச்சாமான்களின் மூடிகள், டிரங்குகள் மற்றும் பெஞ்சுகள் போன்றவை) மற்றும் பெரிதும் பயன்படுத்தப்படும் கதவுகளுக்கு நிலைத்தன்மை மற்றும் ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
க்னைஃப் ஹின்ஜஸ் - அலமாரிகளுக்கு இவ்வகைக் கீல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இவை பிவோட் கீல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன..இந்த வகையான கீல்கள் கத்தரிக்கோலின் ஒரு ஜோடி கத்திகள் போல் இருக்கும்.இந்த கீல் கத்தரிக்கோலின் வடிவத்தைக் கொண்டுள்ளது,இதன் இரண்டு இலைகள் பிவோட் புள்ளியில் இணைக்கப்பட்டுள்ளன, அதனால்தான் இது பிவோட் கீல் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், மேலடுக்கு அல்லது உள் கதவுகள் கொண்ட பெட்டிகளில் அவற்றைக் காணலாம்.
பியானோ ஹின்ஜஸ் - தொடர்ச்சியாக இரண்டு மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இவை, குறிப்பாக பைஃபோல்ட் அல்லது கான்செர்டினா கதவுகளுக்கு பொருத்தமான இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. பியானோவில் பயன்படுத்தப்படுவதால் இவற்றிற்கு இந்தப் பெயர் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வொர்க் பெஞ்சுகள், மேசைகள், கேபினட் கதவுகள் மற்றும் சேமிப்புப் பெட்டிகள் தவிர, பணிப்பெட்டிகள் மற்றும் மேசைகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
பிவோட் ஹின்ஜஸ் - ஒரு பிவோட் கீல் என்பது ஒரு கதவின் மேல் மற்றும் கீழ் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.இது ஒரு புள்ளியிலிருந்து ஊசலாடுவது போல் அனுமதிக்கிறது. இந்த கதவு கீல்கள் கனமான கதவுகளை கையாளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக வீடுகள் மற்றும் உணவகங்களில், சமையலறை மற்றும் சாப்பாட்டு பகுதிகளை இணைக்க பிவோட்-கீல் கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன.பிவோட்-கீல் கதவுகளை ஒரே அழுத்தத்தில் எளிதாகத் திறக்க முடியும்.
ஸ்ட்ராப் ஹின்ஜஸ் - இதன் தனித்துவமான அம்சம் அதன் நீண்ட, குறுகிய லீவ்ஸ், சில நேரங்களில் ஒன்று அல்லது சில நேரங்களில் இரண்டை மட்டுமே கொண்டதாக இருக்கும்.கனரக பயன்பாடுகளில் கூடுதல் நிலைப்புத்தன்மையை வழங்குவதால் இவற்றை வாயில் கதவுகளில் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.இன்டீரியர் கேபினட்களில் டிசைன் எலிமென்ட்டாக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.
ஆஃப்செட் ஹின்ஜஸ் - இந்த சிறப்பு கதவு கீல்கள், கதவு சட்டகத்திலிருந்து கதவை இரண்டு அங்குலங்கள் வரை தள்ளி, திறப்பதற்கு உதவி செய்வதோடு கதவுகளை எளிதாக நகர்த்தவும் அனுமதிக்கின்றன.
ஓவர்லேய் ஹின்ஜஸ் - சில கீல்கள் கேபினேட்க்கு தடிமனைச் சேர்க்கலாம். இந்த தடிமனை குறைக்க விரும்புபவர்கள் ஓவர்லேய் ஹின்ஜஸ்களைக் கருத்தில் கொள்ளலாம். இவை பொருத்தப்பட்ட கதவுகளை பின்புறமாக மடித்து கதவுகள் தடிமன் இல்லாததுபோல் வடிவமைக்க உதவுகின்றன.
சிலிண்டர் ஹின்ஜஸ் / கண்ணுக்கு தெரியாத கீல் - இந்த கீல் ஒரு கதவை முழுமையாக 180 டிகிரி கோணத்தில் திறக்க அனுமதிக்கிறது.எனவே இது பைஃபோல்ட் அல்லது கான்செர்டினா கதவுகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.மரத்தில் துளையிடப்பட்ட துளைகளில் பொருத்தப்பட்ட,இந்த சிலிண்டர் கதவு கீல்கள் கதவு மூடப்படும் போது கண்களுக்கு தெரிவதில்லை.