சமையலறை சிம்னியை சுத்தம் செய்வது எப்படி


சமையலறை சிம்னியை சுத்தம் செய்வது எப்படி
x

வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம்.

வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், புகை மற்றும் நீராவி. சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை சிறப்பாக வெளியேற்றி, சுவர்களின் வண்ணத்தை பாதுகாக்கும் கருவி சிம்னி. அதுமட்டும் அல்ல மிளகாய் நெடியால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல் தும்மல் ஏற்படாமல் காப்பாற்றுவதும் சிம்னி தான். மற்ற வீட்டு உபயோக கருவிகளை சுத்தம் செய்வது போல இதையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை வெளிவேற்றுவது தான் சிம்னியின் வேலை. இவற்றை வெளியேற்றும் போது புகை மற்றும் நீராவியில் இருக்கும் நீர்த்துளிகள், கரி துகள்கள், எண்ணெய் பிசுபிசுப்பு இவை சிம்னியில் உள்ள நுண்ணிய துளைகள் கொண்ட பல அடுக்கு வலைகளில் வடிகட்டப்படும். இப்படி சேரும் இந்த அழுக்கினால் இரண்டு தீமைகள் நேரும். ஒன்று, நோய் கிருமி மற்றும் பூஞ்சை காளான் உருவாகும். இதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டு, சிம்னி வழியாக புகை வெளியேறுவது தடைபடும். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.

சரி, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சிம்னி சுத்தம் செய்ய வேண்டும்? பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை சிம்னியில் உள்ள வடிகட்டும் வலைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் அதிகம் எண்ணெய் மற்றும் கார சாரமான உணவு வகைகளை அடிக்கடி சமைப்பவராக இருந்தால், மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சார்க்கோள் பில்டர் சிம்னி பயன்படுத்தினால் 6 மாத்திற்கு ஒரு முறை பில்டரை மாற்ற வேண்டும்.

இனி சிம்னியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். சிம்னியை சுத்தம் செய்ய அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிம்னியில் உள்ள வடிகட்டிகள், வலைகள், தட்டைகள் மற்றும் அதன் மூடி இவற்றை சுத்தம் செய்தால் போதும். நீங்கள் எந்த பாகத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தேவைபடும் பொருட்கள் மாறுபடும். சிம்னியின் மூடியை சுத்தம் செய்கிறீர்கள் என்றால் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா தேவைப்படும். பில்டர் சுத்தம் செய்ய வேண்டுமானால், அதில் உள்ள கரையின் அளவை பொறுத்து சுத்தம் செய்யும் பொருட்கள் வேறுபடும். ஓரளவு கரை இருந்தால் பாத்திரம் துலக்க பயன்படும் லிக்விட் போதும். விடாப்பிடியான கரை இருந்தால் பெயிண்ட் தின்னெர் தேவைபடும். மூடியை சுத்தம் செய்வதை பார்ப்போம்.

மூடியை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்தலாம். முதலில் டவல்/பேப்பரால் வினிகரில் நன்றாக நனைத்து மூடியின் மூளை முடுக்கெல்லாம் தடவுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சுத்தமான நீரில் ஒரு துணியை நனைத்து நன்றாக அழுத்தி துடையுங்கள். மூடி மேல் படிந்த கறை அகன்று விடும். இன்னும் கறை போகாமல் இருந்தால் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா பவுடரில் தேவையான அளவு நீர்/வைட் வினிகர் சேர்த்து மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை மூடி மீது தடவி 5 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைத்து விடுங்கள். இப்போது மூடி நன்றாக சுத்தம் ஆகியிருக்கும்.

பில்டர் மாறும் வலைகளை சுத்தம் செய்ய உங்களுலுக்கு ஒரு டப் தேவைப்படும். முதலில் 2 கப் வினிகர், 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது உப்பு தூவுங்கள். டப்பில் சூடு நீர் ஊற்றி நிரப்புங்கள். பில்டர் மற்றும் வலைகளை அதில் முழ்கச் செய்யுங்கள். 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு வெளியே எடுத்தது சுத்தமான நீரால் நன்றாக துடையுங்கள். இன்னும் கறை மற்றும் பிசுபிசுப்பு உள்ளதா? கவலை வேண்டாம். இப்பொது பில்டர் மற்றும் வலைகளை ஒரு பெரிய ஸ்டீல் பத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி , டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி, 30 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். எண்ணெணை பிசுபிசுப்பு கரை எல்லாம் அகன்று விடும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த பின் ஒரு துணியால் நன்றா அழுத்தி துடையுங்கள். பில்டர் மற்றும் வலை சுத்தம் ஆகிவிடும். இந்த முறையில் வேகமாக கறைகளை நீக்கலாம். விடாப்பிடியான கறை மற்றும் எண்ணெணை பிசுக்கை விரைவாக நீக்க ஒரு வழி உள்ளது. அது தான் பெயிண்ட் தின்னெர் பயன்படுத்துவது. பில்டர் மற்றும் வலைகளின் கறை மீது பஞ்சு/துணியால் வினிகர் நனைத்து தடவுங்கள். கறை வலுவாக இருக்கும் இடங்களில் சில துளிகள் வினிகர் தெளியுங்கள். சில நிமிடத்தில் கத்தி அல்லது வேறு ஏதாவது கருவி கொண்டு சுரண்டி எடுத்து விடுங்கள். ஒரு முக்கிய தகவல். வினிகர் விரைவாக ஆவியாகிவிடும்; நெடி அதிகம் இருக்கும். அதனால் இதை செய்யும் போது காற்றோட்டமான இடத்தில் செய்யவும். இப்பொது விடாப்பிடி கறையும் நீங்கி விடும்.

மேலே கூறிய வழிகளை பின்பற்றி உங்கள் சிம்னியை சுத்தம் செய்து குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்கவும். சமையலறை சுவற்றின் அழகையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


Next Story