ஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை


ஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை
x
தினத்தந்தி 29 Aug 2018 9:00 PM GMT (Updated: 29 Aug 2018 7:26 PM GMT)

ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.

டோக்கியோ, 

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஜப்பான் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகிய 4 வீரர்கள் விளையாட்டு கிராமத்தில் இருந்து வெளியேறி ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட 4 வீரர்களையும் கடந்த 20–ந் தேதி தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 கூடைப்பந்து வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.


Next Story