கூடைப்பந்து: சென்னை பல்கலைக்கழக அணிகள் தங்கம் வென்றன
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் சென்னை பல்கலைக்கழக கூடைப்பந்து அணிகள் தங்கம் வென்று அசத்தினர்.
புவனேசுவரம்,
முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் கூடைப்பந்து போட்டியில் சென்னை பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தின.
இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணி 104-91 என்ற புள்ளி கணக்கில் மும்பை பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழக அணி 81-75 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தை (சென்னை) சாய்த்தது.
கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி (சென்னை) 21-25, 23-25, 23-25 என்ற நேர்செட்டில் குருசேத்ரா பல்கலைக்கழக (அரியானா) அணியிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
Related Tags :
Next Story