பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் - தேர்வுத்துறை


பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்  -  தேர்வுத்துறை
x
தினத்தந்தி 8 April 2023 4:38 PM IST (Updated: 8 April 2023 4:57 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story