இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: கான்வே, டேரில் மிட்சேல் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி.!


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: கான்வே, டேரில் மிட்சேல் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி.!
x

நியூசிலாந்து அணி 45.4 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கார்டிப்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது..

இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 72 ரன்களும், டேவிட் மலன், லிவிங்ஸ்டர், பென் ஸ்டோக்ஸ் அரைசதமும் அடித்தனர். இதனை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்சேல் ஆகியோரின் அபார பேட்டிங்கால் நியூசிலாந்து அணி போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்குமான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story