இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா படைத்துள்ள 2 மோசமான சாதனைகள்...!


இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா படைத்துள்ள 2 மோசமான சாதனைகள்...!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 3 Jan 2024 2:00 PM GMT (Updated: 3 Jan 2024 2:04 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 2 மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

அவை விவரம் பின்வருமாறு;-

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2021இல் வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 62 ரன்களில் சுருண்டதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.

2. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்று மீண்டு வந்த பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அடித்த குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை விளையாடுவதற்கு தடை பெற்று மீண்டு வந்த பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.


Next Story