ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணி 213 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை.!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணி 213 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை.!
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணி 213 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.

சிட்னி,

ஆஸ்திரேலியா - வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எலிசி பெர்ரி 70 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 'மெகா' இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விரட்டிபிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 199 ரன் இலக்கை எட்டிப்பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தகர்த்து வெஸ்ட்இண்டீஸ் புதிய உலக சாதனை படைத்தது.

இவ்விரு அணிகளும் சேர்ந்து இந்த ஆட்டத்தில் மொத்தம் 425 ரன்கள் திரட்டின. பெண்கள் 20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 132 ரன்கள் (64 பந்து, 20 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகி விருதையும் கைப்பற்றினார்.


Next Story