சென்னை: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. இதன் குறைந்தபட்ச விலை ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இதன் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,200 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.12 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.2,400, ரூ.4 ஆயிரம், ரூ.4,800, ரூ.8 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி www.paytm.com என்ற இணைய தளம் மூலம் டிக்கெட் பெற முடியும்.
Related Tags :
Next Story