அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு; கவுதம் கம்பீர் அறிவிப்பு
அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல்வேறு போட்டிகளில் அணி வெற்றி பெறுவதற்கு விளையாடியவர் கவுதம் கம்பீர்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து சிறப்புடன் விளையாடினார். இதேபோன்று 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியிலும் 75 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டுக்கு பின் அணியில் சேர்க்கப்படாத நிலையில், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார்.
இந்நிலையில், ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவர் 147 ஒரு நாள் போட்டிகளில் 5,238 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோன்று 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்கள் எடுத்துள்ளார்.
Related Tags :
Next Story