கிரிக்கெட்

ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி + "||" + I will not let the ball fly for a crowd of fans - Virat Kohli

ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி

ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி
ரசிகர்களின் கூட்டத்திற்காக பந்தை பறக்க விடமாட்டேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்,

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டை இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 94 ரன்கள்(6 பவுண்டரி , 6 சிக்சர்கள்)குவித்தார். இறுதிவரை களத்தில் நின்று ஆடிய அவர் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசிய போது, “நான் இந்த இன்னிங்ஸில் முதல் பாதியில் விளையாடியதை இளம் வீரர்கள் பின்பற்ற வேண்டாம். நான் முதல் பகுதியில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தேன். நான் பந்தை அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் அல்ல, நிதானமாக விளையாடுபவன்.

நான் கூடியிருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்காக பந்தை பறக்க விட மாட்டேன். ஆனால் நாட்டிற்காக விளையாடும் போது அணியின் வெற்றி மட்டுமே முக்கியம்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ரசிகர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்’ - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
“ரசிகர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” என்று நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
3. கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
4. ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் கூறினார்.
5. முதல்-அமைச்சர் பதவி வேண்டாம்: ரஜினியின் அறிவிப்பை கேட்டு திருச்சி ரசிகர்கள் ஏமாற்றம்
முதல்-அமைச்சர் பதவி வேண்டாம் என ரஜினியின் அறிவிப்பை கேட்டு திருச்சி ரசிகர்கள் மனவேதனை அடைந்தனர். மேலும் தாங்கள் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து கொண்டாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.