கிரிக்கெட்

‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது’ - கும்பிளே வேண்டுகோள் + "||" + In the fight against Corona, there should be no laxity - Gumbale request

‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது’ - கும்பிளே வேண்டுகோள்

‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது’ - கும்பிளே வேண்டுகோள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று கும்பிளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ பதிவில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இது ஒரு டெஸ்ட் போட்டி போன்றதாகும். டெஸ்ட் போட்டி வெறும் 5 நாட்கள் தான் நடைபெறும். ஆனால் இது நீண்டதாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 இன்னிங்ஸ் மட்டுமே உண்டு. ஆனால் இதில் அதனை காட்டிலும் அதிகமாக இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாம் சற்று முன்னிலையில் இருக்கிறோம் என்பதற்காக மெத்தனமாக இருக்கக்கூடாது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸ் உண்மையில் மிகவும் கடினமாக இருக்கலாம். இந்த போராட்டத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னலம் பார்க்காமல் ஈடுபட்டு இருக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் உள்பட 199 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,955 ஆக உயர்ந்தது.
2. 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று: கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 80 வீரர்கள் ரோந்து கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
3. வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
4. புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
நெல்லையில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலியானார்கள்.
5. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.