பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 May 2020 11:37 PM GMT (Updated: 24 May 2020 11:37 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜூனியர் தேர்வு கமிட்டி உறுப்பினருமான தவ்பீக் உமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2001 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக 44 டெஸ்டுகளில் விளையாடி 7 சதம் உள்பட 2,963 ரன்கள் எடுத்தவரான 38 வயதான தவ்பீக் உமர் கூறுகையில், ‘முந்தைய நாள் இரவு லேசான காய்ச்சலுடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் சீக்கிரம் குணமடைய அனைவரும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். மஜீத் ஹக் (ஸ்காட்லாந்து), ஜாபர் சர்ப்ராஸ் (பாகிஸ்தான்), சோலோ நிக்வெனி (தென்ஆப்பிரிக்கா) ஆகியோருக்கு பிறகு கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உள்ள 4-வது கிரிக்கெட் வீரர் தவ்பீக் உமர் ஆவார்.

Next Story