கொல்கத்தாவின் கனவை கலைக்குமா ஐதராபாத்?


கொல்கத்தாவின் கனவை கலைக்குமா ஐதராபாத்?
x
தினத்தந்தி 3 Oct 2021 3:02 AM GMT (Updated: 3 Oct 2021 3:02 AM GMT)

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்கலாம்.

கேப்டன் மோர்கன் ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. கடந்த 5 ஆட்டங்களில் அவர் வெறும் 17 ரன் மட்டுமே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்பினால் அணி வலுவடையும். மற்றபடி வெங்கடேஷ் அய்யர், திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோரின் பேட்டிங் கவனத்தை ஈர்த்துள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சில கேட்ச்களை கோட்டை விட்டதால் தோல்வியை தழுவிய கொல்கத்தா அணியினர் இந்த தடவை பீல்டிங்கில் விழிப்புடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம்.

9 தோல்விகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஐதராபாத் அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும். எதிரணியின் அடுத்த சுற்று கனவை சீர்குலைக்கும் வாய்ப்பை பெற்றுள்ள ஐதராபாத் அணி, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டும்.


Next Story