இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2021 11:43 PM GMT (Updated: 24 Dec 2021 11:56 PM GMT)

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது.

செஞ்சூரியன் 

 இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது. இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

 தென்ஆப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ‘பாக்சிங் டே’யில் ஆஸ்திரேலியாவை உதைத்த இந்திய அணி, இந்த முறை தென்ஆப்பிரிக்காவை பதம் பார்க்குமா என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story