‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட்: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 54 ரன்கள் பின்தங்கியுள்ளது


‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட்: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 54 ரன்கள் பின்தங்கியுள்ளது
x
தினத்தந்தி 27 Dec 2021 7:47 AM IST (Updated: 27 Dec 2021 7:47 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 54 ரன்கள் பின்தங்கியுள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில், நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 54 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அந்த அணியின் தொடக்கவீரர் மார்கஸ் ஹாரிஸ் 48 ரன்னுடனும் டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
1 More update

Next Story