நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கப்டில், வில் யங் சதமடித்து அசத்தல்


நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கப்டில், வில் யங் சதமடித்து அசத்தல்
x
தினத்தந்தி 4 April 2022 5:07 AM GMT (Updated: 4 April 2022 5:07 AM GMT)

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மார்டின் கப்டில், வில் யங் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

ஹாமில்டன்,

நெதர்லாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டிலும், கான்வேயும் களமிறங்கினர். ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கப்டிலுடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். இருவரும் நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். கப்டில் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 42.3 ஓவர்களில் 253 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.


Next Story