2024 டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்டு நியமனம்..!

Image Courtesy: @englandcricket
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
லண்டன்,
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






