2-வது டி20; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!


2-வது டி20; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!
x

image courtesy; twitter/ @BCCI

தினத்தந்தி 14 Jan 2024 6:37 PM IST (Updated: 14 Jan 2024 9:51 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி பிளேயிங் 11-ல் இடம்பெற்றுள்ளார்.

இந்தூர்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி இந்த ஆட்டத்திற்கான பிளேயிங் 11-ல் இடம்பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா; ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா , ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான்; ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், குல்பாடின் நைப், நூர் அகமது, பசல்ஹாக் பரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்


Next Story