2-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு


2-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
x

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத்தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் :-

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்

பாகிஸ்தான் அணி வீரர்கள்:-

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கீப்பர்), ஆகா சல்மான், அமீர் ஜமால், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, மிர் ஹம்சா


Next Story