3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு


3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: BCCI Twitter

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

டெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரை விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதனிடையே, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.மழை காரணமாக மைதானத்தில் அதிக அளவில் ஈரப்பதம் உள்ளது. இதனால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கான டாஸ்போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் ஈரப்பதம் நீங்கிய பின்னர் இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Related Tags :
Next Story