3வது டி20 போட்டி: 4 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து...!


3வது டி20 போட்டி: 4 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து...!
x

Image Courtesy: @ICC

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

லாகூர்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டி20 போட்டியில் முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து கேப்டன் டாம் லதாமின் அரைசதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் 6 ரன், பாபர் ஆசம் 1 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சைம் அயூப் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

ஒருபுறம் வெற்றிக்காக போராடிய இப்டிகார் அகமது 24 பந்தில் 60 ரன் எடுத்த போதிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 20ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.


Next Story